Connect with us

Cricket

இளம் வீரரிடம் 2 முறை அவுட்.. நெட்ஸில் தடுமாறிய விராட்.. 2-வது டெஸ்டில் தேறிடுவாரா?

Published

on

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று முடிந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.

இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (செப்டம்பர் 27) துவங்க இருக்கிறது. நாக்பூரில் நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில், இந்திய அணி தனது பயிற்சியில் ஈடுபட்டது. பயிற்சின் போது நெட்சில் பேட் செய்த விராட் கோலிக்கு இளம் வீரர் பந்துவீசினார்.

வேகப்பந்து வீச்சாளரை நெட்சில் எதிர்கொண்ட விராட் கோலி நான்கு ஓவர்கள் பேட் செய்தார். இளம் வேகப்பந்து வீச்சாளர் வீசிய நான்கு ஓவர்களில் விராட் கோலி இரண்டு முறை அவுட் ஆன சம்பவம் அரங்கேறியது. முன்னதாக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி அதிக ரன்களை குவிக்காதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில், அவர் பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளரிடம் இரண்டு முறை அவுட் ஆன சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. லக்னோவை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜாம்ஷெட் ஆலம் தான் விராட் கோலிக்கு நெட்ஸில் பந்துவீசினார்.

இது குறித்து பேசிய ஆலம், “நான் விராட் கோலிக்கு 24 பந்துகளை வீசினேன். சுமார் 135 கி.மீ. வேகத்தில் வீசியிருப்பேன். இதில் அவரை நான் இரண்டு முறை அவுட் செய்தேன். கான்பூரில் பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்ற போதிலும், நெட்ஸில் பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.”

“விராட் என்னிடம் வந்து, ‘நன்றாக பந்துவீசினாய், உனது வயது என்ன?’ என்றார். நான் அவரிடம் 22 என்றேன். அதற்கு அவர் ‘தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். அவரை அவுட் செய்ததும் நான் மிதக்க துவங்கினேன்,” என்று தெரிவித்தார்.

google news