latest news
பாஜக பொறுப்பேற்காது…செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்…வானதி சீனிவாசன் விளக்கம்…
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப் பறிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கட்டிருக்கிறார். ஒரு வருடங்களுக்கு மேலாக சிறை வாசத்தை அனுபவித்து வரும் அவருக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் மத்தியில் ஆட்சி செய்து வரும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் ஒருவர் மீது கூட இது வரை ஊழல் குற்றம் சாட்டப்பட்டதில்லை என்றார்.
அதோடு செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கைக்கு பாரதிய ஜனதா கட்சி தான் காரணமா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு முழுமையான விசாரணை மேற்கொண்டு அதன் பிறகே கைது நடவடிக்கை எடுக்கப்படும், நடவடிக்கைகளுக்கு பின்னர் வரும் கற்பனை செய்திகளுக்கெல்லாம் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்க முடியாது என பதிலளித்தார்.
செந்தில் பாலாஜி மீதான வழக்ககை நீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்கிறது, செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை பயன்படுத்துவார் என்பதால் சாட்சி சொல்ல பயந்தனர், திமுக தனது அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கை நீர்த்திப்போக செய்து விடாமல் இருக்க வேண்டும் என்பதே தங்களது கருத்து என்றார்.
சாட்சிகளை கலைப்படும் வேலைகளோ, அல்லது அவர்களை மிரட்டுவது போன்ற விஷயங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றார். திமுகவின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் மீது எத்தனை குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இருக்கிறது என்பதனை மக்களின் முன்பாக ஞாபகப்படுத்துவதாக சொன்னார்.