Connect with us

Cricket

ஆர்சிபி-யில் கோலியின் அரசியல்.. காட்டுத்தீயாக பரவிய தகவல்.. நெட்டிசன்களை கிழித்து தொங்கவிட்ட ரிஷப் பண்ட்

Published

on

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் -பேட்டர் ரிஷப் பண்ட் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடுவது பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது. ஐபிஎல் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அணிகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்த தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.

அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் யூகங்கள் அடிப்படையில் சமூக வலைதளங்களில் வெளியாக, அதனை பலரும் பகிர வைரல் ஆகி விடுகிறது. அப்படித் தான் ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் ரிஷப் பண்ட் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

எக்ஸ் தள பதிவில் ஒருவர், “ரிஷப் பண்ட் ஆர்சிபி அணியை தனது மேலாளர் மூலம் தொடர்பு கொண்டு அந்த அணியின் கேப்டனாக தன்னை நியமிக்க கோரிக்கை விடுத்தார். ஆனால் அதனை ஆர்சிபி நிராகரித்துவிட்டது. ஆர்சிபி அணியில் ரிஷப் பண்ட் இடம்பெறக்கூடாது என்று விராட் கோலி அரசியல் செய்துவிட்டார். இதே நிலை அவருக்கு இந்திய அணியிலும் இடம்பெறலாம்,” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து விளக்கம் அளித்த ரிஷப் பண்ட், “போலி செய்தி. சமூக வலைதளங்களில் ஏன் இதுபோன்ற போலி செய்திகளை பரப்புகின்றீர்கள்? கொஞ்சம் அறிவுப்பூர்வமாக இருங்கள், இது மிகவும் மோசமாக உள்ளது. எந்த வித காரணமும் இன்றி நம்பிக்கையற்ற சூழலை உருவாக்கிவிடாதீர்கள். இது முதல்முறை இல்லை, மேலும் இது கடைசியாகவும் இருக்காது, எனினும் இதைப் பற்றி நான் பேச வேண்டியாகிவிட்டது.”

“உங்களது தகவல்களை தயவு செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் இது மிகவும் மோசமாக மாறி வருகிறது. இதைமீறி உங்களிடம் தான் உள்ளது. இது உங்களுக்கானது மட்டுமல்ல, தவறான தகவல்களை பரப்பி வரும் மற்றவர்களுக்கும் தான்,” என்று குறிப்பிட்டார்.

google news