Connect with us

latest news

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

Published

on

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு வழங்குகிறது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 6,000 வழங்கப்படுகிறது. இந்த தொகை ரூ. 2000 வீதம் மூன்று தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியா முழுக்க அதிகபட்சம் 2 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யும் சிறு விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.

விவசாயிகள் இந்த திட்டத்தில் பங்கேற்க தகுதி இருப்பதையும், ஏற்கனவே திட்டத்தில் இணைந்திருப்பதை கீழே கொடுக்கப்படும் வழிமுறைகளை பின்பற்றி அறிந்து கொள்ள முடியும்..

பிஎம் கிசான் வலைதளம் செல்ல வேண்டும்.

வலைப்பக்கத்தில் பயன்பெறுவோர் பட்டியலை (Beneficiary List) இயக்கலாம்.

இனி மாநிலம், மாவட்டம், மற்றும் முகவரியை சரியாக தேர்வு செய்ய வேண்டும்.

இறுதியில் அறிக்கையை வழங்கக் கோரும் (Get Report) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதில் உங்களது பெயர் இடம்பெற்று இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு: வெளிப்படைத்தன்மையை வழங்கும் நோக்கில் பயனாளிகள் பட்டியல் பஞ்சாயத்து அலவலகங்களிலும் ஒட்டப்படுகிறது.

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 17 ஆவது தவணை கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி ரூ. 2000 பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இந்திய பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்றதும் பிரதமர் மோடி இந்த தவணையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

latest news

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

Published

on

Karnataka CM

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  ஹெச்.டி.குமாரசாமி மந்திரியாக உள்ளார். அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட பிறகே அவர் ஜாமின் பெற்றார் எனவும் சொல்லியிருக்கிறார்.

மூடா மோசடி தொடர்பாக கர்நாடக மாநில  முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்ய கவர்னர் அளித்த உத்தரவு செல்லும் என கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து முறைகேடடு தொடர்பாக லோக் ஆயுக்தா விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ராஜினாமா சித்தராமையா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது.

siddaramaiah

siddaramaiah

இதெல்லாம் நமது அரசியலை சீர்குலப்பதற்கான அரசியல் வேலை, அதை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள், லோட்டஸ் ஆபரேசனை முயற்சி செய்தார்கள், அது தோல்வி அடைந்தது, ஆட்சி அமைப்பதற்கான எம்.எல்.ஏக்கள் இல்லாமல் இரண்டு முறை ஆட்சி அமைத்தார்கள் எடியூரப்பா வெற்றி பெற்றாரா? என  கேட்டிருந்தார்.

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ஹெச்.டி.குமாரசாமி இடம் பிடித்துள்ளார். மந்திரியாக உள்ள அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட பிறகே அவர் ஜாமீன் பெற்றிருக்கிறார் என கூறியிருக்கும் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தான் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்பதனையும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். மூடா மோசடி தொடர்பான விஷயங்களுக்கு பிறகு கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பு ஏற்படத் துவங்கியது.

 

google news
Continue Reading

latest news

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

Published

on

ops

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார். அதோடு இரட்டை இலையை டெபாசிட் இழக்க செய்து தமிழக அரசியலில் அருவருக்கத்தக்க அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பிரிந்திருக்கக் கூடிய சக்திகள் அனைவரும் தொண்டர்கள் தான் என்றார்.

Panneer selvam

Panneer selvam

தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது, நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை கேட்டு வாங்கி, ஏழு இடங்களில் டெபாசிட் பறிபோய் இருக்கிறது என்றார். அதோடு பதிமூன்று இடங்களில் மூன்றாவது இடத்தில் வந்திருக்கிறது, பிற பாராளுமன்ற தொகுதிகளிலும் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

தொண்டர்களை பிரித்து வைத்திருக்கும் காரணத்தினாலேயே ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்காமல் போனது, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய இந்த இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என்றார்.

சுயேட்சையாக தான் போட்டியிட்டு முப்பத்தி மூன்று சதவீத வாக்குகளை பெற்றிருப்பதாகவும், இது தொண்டர்களும், பொது மக்களும் தங்கள் பக்கத்தில் இருப்பதையே இது காட்டியிருப்பதாகவும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிட்ட போது பன்னீர் செல்வம் என்ற பெயரில் ஆறு பேர் களம் கண்டனர் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

google news
Continue Reading

Cricket

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

Published

on

India Bangladesh

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் எதிர்த்து விளையாட இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி.

டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் வைத்து இந்த இரு அணிகளுக்கு இடையே நடந்து முடிந்தது. ஆல்-ரவுண்டர்கள் அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் சிறப்பான பங்களிப்பினால் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது இந்திய அணி.

துவக்கத்தில் தடுமாறினாலும் நேரம் செல்லச் செல்ல தனது ஆதிக்கத்தை அதிகரித்தது. இந்திய பவுலர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாரி இறுதியில் சரண்டரானது பங்களாதேஷ். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. டாஸ் போடுவதில் தாம்தம் ஏற்பட்ட நிலையில் டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்து வங்கதேசத்தை பேட்டிங் செய்ய பணித்தது.

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மூன்று பேர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் தனது பேட்டிங்கை தடுமாற்றத்துடனே துவங்கியது வங்கதேசம்.

Deep

Deep

இருபத்தி ஆறு ரன்களை எடுத்திருந்த நிலையில் தனது முதல் விக்கெட்டை இழந்தது அந்த அணி, இருபத்தி ஒன்பது மற்றும் என்பது ரன் கள் எடுத்திருந்த நிலையில் முறையே தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது விக்கெட்டுகளை இழந்தது வங்கதேச அணி. இந்திய அணியின் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆல்-ரவுண்டர் அஷ்வின் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

முப்பத்தி ஐந்து ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில் வங்கதேச் அணி நூற்றி ஏழு ரன்களை எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இன்றைய ஆட்டம்  நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளான நாளைய தினத்தினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இரு நாட்டு அணி ரசிகர்களும்.

google news
Continue Reading

Cricket

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

Published

on

Bravo

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி வீரரகள் தனது பார்முக்கு வந்து அதிரடியை காட்டத் துவங்கினால் எதிரணி வீரர்கள் எல்லாம் கப்-சிப் என மாறிவிடுவார்கள். அபாயகரமான பேட்ஸ்மேன்களையும், அதிரடி பவுலர்களையும் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டிற்கு கொடுத்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.

சில காலங்களாகவே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது இந்த அணி. ஜாம்பவான் வீரர்கள் பலர் தங்களது ஓய்வை அறிவித்ததாலும், விளையாட்டினை தொடர முடியாமல் போனதாலும் முன் போல தனக்கான தனித்துவத்தை பெற தொடர்ந்து போராடி வருகிறது இந்த அணி.

இந்நிலையில் சர்வதேச போட்டிகள் அனைத்து விதத்திலிருந்தும் 2021ம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்த ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விடை பெறுவதாக அறிவித்துள்ளார்.

Dwayne bravo

Dwayne bravo

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக நாற்பது டெஸ்ட் போட்டிகள், நூற்றி அறுபத்தி நாலு ஒரு நாள் போட்டிகள், தொன்னூற்றி ஓரு டி-20 போட்டிகளில் விளையாடி இருந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தான தனது ஓய்விற்கு பிறகு உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்தார்.

இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளிலிருந்தும் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் பிராவோ. கரீபியன் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடி வந்த நிலையில் இருபத்தி நான்காம் தேதி நடந்து முடிந்த போட்டியின் போது பிராவோ காயமடைந்திருந்தார்.

இந்த சூழலில் தனது ஓய்வு அறிவிப்பை அறிவித்தவர் கண்ணீர் மல்க விடை பெற்றார். நடந்து முடிந்த இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் இருந்து வந்தார். கத்து குட்டி அணியாகவே பார்க்கபட்ட அந்த அணி அரை இறுதி வரை முன்னேறி மற்ற அணிகளுக்கு அதிர்ச்சியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

google news
Continue Reading

Finance

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

Published

on

Gold

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் தங்கத்திற்கு என தனி மவுசு இருந்தே வருகிறது. நாளுக்கு நாள் அதன் மீதான மோகமும், அதன் தேவையும் அதிகரித்தே வரும் நிலையே இருக்கிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை அடுத்தடுத்து உயர்வை சந்தித்து வருவது நகை பிரியர்களுக்கு தலைவலி தரக்கூடிய விஷயமகவே மாறி வருகிறது.

நேற்று மாற்றம் ஏதும் தென்படாமல் இருந்த தங்கத்தின் விற்பனை விலை இன்று ஒரே நாளில் அதிரடி உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராம் ஏழாயிரத்து அறுபது ரூபாய்க்கு (ரூ.7,060/-) விற்பனையாகி வந்த நிலையில் இன்று நாற்பது ரூபாய் (ரூ.40/-) உயர்ந்து ஏழாயிரத்து நூறு ரூபாய்க்கு (ரூ.7,100/-)விற்பனை செய்யப்படுகிறது.

Silver

Silver

ஒரு சவரனின் விலை நேற்று ஐம்பத்தி ஆராயிரத்து நானூற்றி என்பது ரூபாய்க்கு (ரூ.56,480/-) விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரு சவரனின் விலை ஐம்பத்தி ஆராயிரத்து என்னூறு ரூபாயாக (ரூ.56,800/-)உள்ளது. சவரன் ஒன்றுக்கு இன்று முன்னூற்றி இருபது ரூபாய் (320/-)உயர்ந்துள்ளது.

வெள்ளியின் விலையும் இன்று தங்கத்தைப் போலவே ஏறுமுகத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் வெள்ளி நூற்றி ஓரு ரூபாய்க்கு (ரூ.101/-) விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு ரூபாய் உயர்ந்து (ரூ.1/-) நூற்றி இரண்டு ரூபாய்க்கு (ரூ.102/-) விற்கப்பட்டு வருகிறது.

ஒரு கிலோ பார் வெள்ளி நேற்று ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாக (ரூ.1,01,000/-) இருந்து வந்த நிலையில் இன்று ஆயிரம் ரூபாய் (ரூ.1,000/-) உயர்ந்து ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு (ரூ.1,02,000/-) விற்கப்படுகிறது. தொடர்ச்சியாக ஏறுமுகத்திலேயே இருந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலையால் ஆபரணப்பிரியர்கள் அதிகமான கவலைக்கு உள்ளாகி வருகின்றனர்.

 

 

google news
Continue Reading

Trending