Connect with us

Cricket

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

Published

on

India Bangladesh

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் எதிர்த்து விளையாட இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி.

டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் வைத்து இந்த இரு அணிகளுக்கு இடையே நடந்து முடிந்தது. ஆல்-ரவுண்டர்கள் அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் சிறப்பான பங்களிப்பினால் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது இந்திய அணி.

துவக்கத்தில் தடுமாறினாலும் நேரம் செல்லச் செல்ல தனது ஆதிக்கத்தை அதிகரித்தது. இந்திய பவுலர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாரி இறுதியில் சரண்டரானது பங்களாதேஷ். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. டாஸ் போடுவதில் தாம்தம் ஏற்பட்ட நிலையில் டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்து வங்கதேசத்தை பேட்டிங் செய்ய பணித்தது.

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மூன்று பேர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் தனது பேட்டிங்கை தடுமாற்றத்துடனே துவங்கியது வங்கதேசம்.

Deep

Deep

இருபத்தி ஆறு ரன்களை எடுத்திருந்த நிலையில் தனது முதல் விக்கெட்டை இழந்தது அந்த அணி, இருபத்தி ஒன்பது மற்றும் என்பது ரன் கள் எடுத்திருந்த நிலையில் முறையே தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது விக்கெட்டுகளை இழந்தது வங்கதேச அணி. இந்திய அணியின் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆல்-ரவுண்டர் அஷ்வின் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

முப்பத்தி ஐந்து ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில் வங்கதேச் அணி நூற்றி ஏழு ரன்களை எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இன்றைய ஆட்டம்  நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளான நாளைய தினத்தினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இரு நாட்டு அணி ரசிகர்களும்.

google news