Connect with us

latest news

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

Published

on

Stalin

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் தமிழகத்தில் காட்டாட்சி தர்பார் நடந்து வருவதாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தின் கடந்த நாற்பது மாதங்களாக நடைபெறும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் காட்டாட்சி தர்பார் ஆட்சியில் அப்பாவி மக்களை வாட்டி வதைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது கொடுமையின் உச்சம் என விமர்சித்துள்ளார். 27.09.2024 அன்று சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட ஒரு சில தீர்மானங்கள், சென்னை மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து நேரடியாக பணத்தைப் பிடுங்கும் வகையில் அமைந்துள்ளது மிகவும் கண்டனத்திற்குறியது என தனது அறிக்கையின் வாயிலாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Edappadi Palanisamy

Edappadi Palanisamy

ஆண்டு தோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்வு அப்படி சொத்து வரி உயர்த்தப்படும் போதெல்லாம் குடிநீர், மற்றும் கழிவு நீர் இணைப்புக் கட்டண உயர்வு, குப்பை வரி உயர்வும் மறைமுகமாக உள்ளடங்கியுள்ளது. மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்குவது, “பூமியில் பிறந்த மனிதன் நிம்மதி பெறுவது அவன் அடக்கம் ஆகும் போதுதான், பெரும் துயரம் கொள்வது உடனிருந்தவர்கள் காலமாகும் போது” என்று மேலை நாட்டு அறிஞர் ஒருவர் மனித வாழ்க்கை பற்றி குறிப்பிட்டுள்ளதாகவும் தனது அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தனியார் மற்றும் அரசுத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு அளிப்பது வழக்கம், தனியாருக்கு சம்பள உயர்வு என்பது அந்தந்த தனியார் நிறுவனத்தில் லாபம் ஈட்டுதலைப் பொறுத்தது. அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 3 சதவீதம் சம்பள உயர்வு என தெரிவித்துள்ளார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *