Connect with us

india

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

Published

on

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர் தான் குமாரசாமி மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது என சொல்லியிருந்தார். இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பதவியை ராஜினாமா செய்தால் தானும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என தெரிவித்துள்ளார்.

Siddaramaiah

Siddaramaiah

கர்நாடகா மூடா நில முறைகேடு தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சித்த ராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லோக் ஆயுத்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 3 பேர் அளித்த புகாரின் பேரில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுத்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து சொல்லி வருகிறது.

இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சித்தராமையா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாருக்கு பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நில ஒதுக்கீடு புகாரில் ஜாமீனின் உள்ள மத்திய அமைச்சர் குமாரசாமி ஆகியோர் பதவி விலக வேண்டும். அவர்கள் பதவி விலகினால் தானும் முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

google news