Connect with us

Cricket

விராட் கோலிக்கு வந்த சோதனை…தள்ளிப்போகும் சாதனை?…

Published

on

Virat Kohli

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.  இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று முன்தினம் துவங்கியது. மழையால் டாஸ் தாமதமான நிலையில் வங்கதேசம் முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் முப்பத்தி ஐந்து ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால்  போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

இரண்டாவது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் நேற்று கைவிடப்பட்டது தொடர் மழை காரணமாக, இந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டமும் ஒரு பந்து கூட வீசப்படாமல் இன்று நிறுத்தப்பட்டது. இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி புதிய சாதனையை இந்த தொடரில் படைப்பார் என அதிகம் எதிர்பார்க்கபடுகிறது.

Kohli

Kohli

இன்னும் நூற்றி இருபத்தி ஒன்பது ரன்களை எடுத்தால் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஒன்பதாயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த உலகின் முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகி விடுவார் இவர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்பதனாயிரம் ரன்களைக் கடக்கும் நான்காவது இந்திய வீரர் என்ற பெருமை மிக்க இலக்கை அடைவதற்கான வாய்ப்பும் வங்கதேசத்திற்கு எதிரான இந்த தொடரில் நடந்துவிடும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி தொடர்ந்து நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இரண்டு நாள் ஆட்டங்கள் ஒரு பந்து கூட வீசப்படாமல் நிறுத்தப்பட்ட நிலை நீடித்தால் விராட் கோலியின் இந்த சாதனை தள்ளிப்போகும் நிலையும் உருவாகி உள்ளது. அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்கள் இருந்தாலும் மீதமுள்ள இரண்டு நாள் விளையாட்டும் தடை இல்லாமல் நடக்க வேண்டும், கோலி சாதனையை இந்த தொடரிலேயே நிகழ்த்த வேண்டும் என்பதுவே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

google news