latest news
அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி…பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்…
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் கோரிக்கை குறித்த மனுக்களை தள்ளுபடி செய்தது நீதி மன்றம். இதனால் அவரது ஜாமீன் மனு உச்சநீதி மன்றத்தில் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்து சில நாட்களுக்கு முன்னர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார் செந்தில் பாலாஜி.
கைது செய்து சிறையிலேயே வைக்கப்பட்டதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியை குலைக்க நினைத்தார்கள், முன்னிலும் உரம் பெற்றவராய் சிறையிலிருந்து வெளியே வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வரவேற்பதாகவும். எமர்ஜென்ஸி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழக்கை கிடையாது, அரசியல் சதிகளால் பதினைந்து மாதங்கள் தொடர்ந்தன. உன் தியாகம் பெரிது அதனினும் உறுதி பெரிது என ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜியை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இதில் அமலாக்கத்துறை வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டது.
மின்துறை அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட செந்தில் பாலாஜிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
செந்தில் பாலாஜியுடன் புதிதாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். பதவி ஏற்றதும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆளுநர் ரவிக்கு பூங்கொத்தினை வழங்கினார். இதே போல முதல்வர் ஸ்டாலினுக்கும் பூங்கொத்தினை வழங்கினார் செந்தில் பாலாஜி. அமைச்சர் பதவி குறித்து ஆட்சேபம் ஏதும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்திருந்தது முன்னதாக.