Connect with us

Cricket

ஓய்வு பற்றி கேள்வி.. டோனியுடன் ஒப்பிட்டு ஷாருக் சொன்ன பதில்.. யாரும் எதிர்பார்க்கல

Published

on

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணிகளும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பான விதிகளை சமீபத்தில் அறிவித்தது. அதன்படி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் ஆறு வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்.

இதோடு கடந்த ஐந்து ஆண்டுகளில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர்கள் அன்-கேப்டு வீரராக கருதப்படுவார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விதி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ். டோனி 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. சிஎஸ்கே அணி எம்.எஸ். டோனியை ரூ. 4 கோடி என்ற தொகைக்கு தக்க வைத்துக் கொள்ளலாம்.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ​​பாலிவுட் நடிகர் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஷாருக் கானிடம் ஓய்வு பற்றி நக்கலாக பேசினார், ஆனால் அதற்கு ஷாருக் கொடுத்த பதில் தற்போது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. நானும், தோனியும் ஒரே மாதிரியான ஜாம்பவான்கள். தோனி தான் ஓய்வு பெறுவதாக கூறிய பிறகும் 10 ஆண்டுகள் விளையாடினார் என்று ஷாருக் தெரிவித்தார்.

“லெஜண்டுகளைப் பொருத்தவரையில் மிகப் பெரிய விஷயம்… அவர்களுக்கு எப்போது நிறுத்த வேண்டும், எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று தெரியும். சச்சின் டெண்டுல்கர், சுனில் சேத்ரி – கால்பந்து வீரர், ரோஜர் பெடரர் – சிறந்த டென்னிஸ் நட்சத்திரம் வரை, எப்போது ஓய்வு பெறுவது என்பது அவர்களுக்குத் தெரியும். நீங்களும் செய்ய வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். எனவே தயவுசெய்து திரும்பிச் செல்லுங்கள். மிக்க நன்றி” என்று ஷாருக் கான் கரண் ஜோஹரிடம் கூறினார்.

“அந்த வகையில் நீங்கள் எப்போது ஓய்வு பெறப் போகின்றீர்கள்” என்று ஜோஹர் பதிலளித்தார். “உண்மையில் நான் வித்தியாசமான லெஜண்ட். தோனியும் நானும் ஒரே மாதிரியான லெஜண்டுகள். முடியாது என கூறிய பிறகும் பத்து ஐபிஎல்களில் நாங்கள் விளையாடுவோம்,” என்று ஷாருக் டைமிங்கில் பதிலளித்தார். ஷாருக் கானின் இந்த பதில் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.

google news