Connect with us

Cricket

கோலி-அஷ்வின் டாக்டிக்ஸ்.. உடனே விழுந்த விக்கெட்

Published

on

இந்தியா வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. இரண்டு நாள் ஆட்டத்தில் வெற்றியை பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி காட்டிய வேகம் பல சாதனைகளை படைத்ததோடு, வங்கதேசம் வீரர்கள் மற்றும் ஒட்டுமொத்த ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நான்காவது நாளில் வங்கதேசம் அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட் செய்ய வைத்த ரோகித் சர்மா, நேற்றைய ஆட்டம் முடிவதற்குள் சில விக்கெட்டுகளை வீழ்த்துவதில் தீயாக செயல்பட்டார். இதற்கு ஏற்றார் போல் பந்துவீச்சாளர்களை களமிறக்கியதோடு, நினைத்தப்படி இந்திய அணி முன்னிலையில் இருப்பதை உறுதிப்படுத்தினார். நேற்றைய ஆட்டத்தின் நிறைவில் இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை எடுக்க பல தந்திரங்களை தொடர்ச்சியாக கையாண்டனர்.

அந்த வகையில், ரவிச்சந்திரன் அஷ்வின் சுழலில் சிக்கி வங்கதேசம் அணி இரண்டு விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. ஒவ்வொரு வீரருக்கும் எப்படி பந்துவீச வேண்டும் என்ற திட்டமிடல் அணியினருடன் எப்போதும் இருக்கும். நேற்றைய ஆட்டத்தில் ரவிச்சந்திரன் அஷ்வின் வீசிய குறிப்பிட்ட ஓவரை வங்கதேசம் அணியின் துவக்க வீரரான ஜாகிர் ஹாசன் எதிர்கொண்டார். அப்போது குறுக்கிட்ட இந்திய வீரர் விராட் கோலி, அஷ்வினிடம் ஏதோ கருத்து தெரிவித்தார்.

இதன்பிறகு, அஷ்வின் வீசிய பந்தில் ஜாகிர் ஹாசன் தனது விக்கெட்டை பறிக்கொடுத்து பெவிலியன் திரும்பினார். இடதுகை ஆட்டக்காரரான ஹாசன் பத்து ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். நேற்றைய ஆட்டநேர முடிவில் வங்கதேசம் அணி 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸில் 26 ரன்கள் பின்னணயில் உள்ளது.

முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக இந்திய அணி 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

google news