india
மகாத்மா காந்தி பிறந்த நாள்…பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மரியாதை…
இந்திய நாடு சுதந்திரம் அடைவதில் முக்கிய பங்கு வகித்தவர் காந்தியடிகள். இவரது தியாகத்தை நினைவு கூறும் விதமாக “மகாத்மா” என அழைக்கபடுகிறார். தேசப்பிதா காந்தியடிகளின் அஹிம்சை கொள்கையின் மூலமாக இந்திய நாடு பிரிட்டீஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது.
மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தியடிகளின் நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட்டில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் அவருக்கு தங்களது மரியாதையை செலுத்தி வருகின்றனர். இன்று காலை முதலே அவரது நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட்டிற்கு சென்று தலைவர்கள் பலரும் தங்களது மரியாதையை மலர் தூவி செய்து வருகின்றனர். நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவு மரியாதையை செலுத்தினார்.
டெல்லி முதல்வர் அதிஷி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா ஆகியோரும் மகாத்மாவின் நினைவிடத்தில் மலர் தூவி தங்களது மரியாதையை செலுத்தினர்.
தமிழக அரசின் சார்பில் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியின் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் அருகே மகாத்மாவின் உருவப்படமும் வைக்கப்பட்டிருந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அங்கு சென்று காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் அப்போது உடனிருந்தார்.
சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மாவின் உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மத்திய அமைச்சர் எல்.முருகனும் ஆளுநருடன் சென்று மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார்.