Connect with us

latest news

அதிமுக எம்ஜிஆர் ஜெயலலிதா பாதையில் செல்கிறதா?…பாஜக எச்.ராஜா கேள்வி?…

Published

on

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை கல்வி கற்பதற்காக வெளிநாடு சென்றுள்ளார். இதனால் கட்சிப்பணிகளை கவனிக்க பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அக்கட்சியின் தமிழக முன்னாள் மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். தனது இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது கூட தமிழகத்தின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.

தமிழக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் நியமனத்தில் அவசரம் காட்டாத தமிழக அரசு துணை முதல்வர் நியமனத்தில் அவசரம் காட்டியது என விமர்சித்து பேசியிருந்தார். பல்வேறு துறைகளில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது எனவும் விமர்சித்திருந்தார்.

hraja

hraja

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தமிழகத்தின் எதிர்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் அதிமுக பதினைந்து சதவீத வாக்குகளை இழந்துள்ளது என விமர்சித்திருந்தார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பாதையில் அதிமுக செல்கிறதா? என அக்கட்சித் தொண்டர்கள் நினைத்திருக்கலாம் என சொல்லியிருந்தார். அதே போல அறநிலையத்துறை புனரமைப்பு செய்த கோவில்கள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்தவர்கள் தான் மூட வேண்டுமே தவிர மத்திய அரசு மூடாது எனவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு என்பது அரசியல் மோசடி மாநாடு, மக்களை ஏமாற்றும் மோசடி எனவும் சொல்லியிருந்தார் எச்.ராஜா.

google news