Connect with us

Cricket

டோனி ஸ்கிரீனை குத்தினார்.. படியில் இருந்து அதை பார்த்தேன்.. ஹர்பஜன் சிங்

Published

on

கிரிக்கெட் உலகில் மிகவும் அமைதியானவராக அறியப்படுபவர் எம்.எஸ். டோனி. இந்திய அணிக்காக அதிக ஐ.சி.சி. கோப்பைகளை வென்ற கேப்டன், ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக அதிக கோப்பைகளை வென்ற கேப்டன் என பல சாதனைகளை எம்.எஸ். டோனி தன்பக்கம் வைத்திருக்கிறார்.

போட்டியின் முடிவு எந்த நிலையில் இருந்தாலும், மிகவும் அமைதியாக அந்த சூழலை கடந்து வருவதில் எம்.எஸ். டோனி பெயர்பெற்றவர். எம்.எஸ். டோனி களத்தில் சில முறை கோபத்தை வெளிப்படுத்திய சம்பவங்கள் மிகவும் குறைவு என்பதோடு, அவை யாராலும் மறக்க முடியாத அளவுக்கு வைரல் சம்பவங்களாகவும் உள்ளன.

எம்.எஸ். டோனி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2024 தொடரோடு ஓய்வு பெறுவார் என்ற வாக்கில் தகவல்கள் வெளியாகி வந்தன. கடந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணி கோப்பையை வெல்லும் பட்சத்தில் வெற்றிக் கோப்பையுடன் ஓய்வு பெறுவதை எம்.எஸ். டோனி திட்டமாக கொண்டிருந்தார் என்று கூறப்பட்டது.

இந்த திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் போட்டியில் சி.எஸ்.கே. மற்றும் ஆர்.சி.பி. அணிகள் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் மோதின. இந்தப் போட்டியில் இக்கட்டான சூழலில் எம்.எஸ். டோனி அவுட் ஆகி வெளியேறினார். இந்தப்போட்டியில் வெற்றி பெற முடியாத கோபம் எம்.எஸ். டோனி முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது.

மேலும், போட்டி முடிந்த பிறகு எம்.எஸ். டோனி உள்பட சி.எஸ்.கே. வீரர்கள் ஆர்.சி.பி. அணியுடன் கை குலுக்க களத்தில் காத்திருந்தனர். எனினும், வழக்கத்திற்கு மாறாக ஆர்.சி.பி. அணி வெற்றிக் கொண்டாட்டத்திற்கு சிறிது நேரத்தை எடுத்துக் கொண்டனர். இதனால் எம்.எஸ். டோனி ஆர்.சி.பி. வீரர்களுக்கு கை கொடுக்காமல் டிரெசிங் ரூம் சென்றுவிட்டார். இந்த சம்பவங்கள் அந்த சமயம் பேசுபொருளாக மாறியது.

இந்த நிலையில், அந்த சம்வத்திற்கு பின் டிரெசிங் ரூம் சென்ற எம்.எஸ். டோனி அங்கிருந்த திரைக்கு பலமாக குத்து விட்டார் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார். “ஆர்.சி.பி. கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர், அவர்கள் அப்படி செய்ய எல்லா உரிமையும் உள்ளது. அவர்கள் வெற்றிப் பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.”

“நான் படிக்கட்டில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தேன். அவர்கள் களத்தில் ஆரவாரமாக கொண்டாடினர். சி.எஸ்.கே. வீரர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க அணிவகுத்து நின்றிருந்தனர். ஆனால், அவர்கள் வருவதற்கு சிறிது நேரம் ஆகிவிட்டது. ஆர்.சி.பி. வீரர்கள் கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு திரும்புவதற்குள் எம்.எஸ். டோனி மீண்டும் டிரெசிங் ரூம் சென்றுவிட்டார்.”

“அப்போது, அங்கிருந்த திரையை எம்.எஸ். டோனி வேகமாக குத்தினார். இதில் எந்த தவறும் இல்லை. விளையாட்டில் இத்தகைய சம்பவங்கள் நடப்பது வழக்கமான ஒன்று தான்,” என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

google news