Connect with us

Cricket

நம்பிக்கை தரும் நிதிஷ்!…பறிபோகுமா சிவம் தூபேயின் இடம்?…

Published

on

Shivam Dubey

கிரிக்கெட் போட்டிகளுக்கான ரசிகர்கள்  போட்டியை காண அதிகமான ஆர்வத்தில் வருவது தங்களது விருப்ப வீரர்களின் விளையாட்டு திறனை நேரில் கண்டு ரசிக்கவும், போட்டியில் இருக்கும் விறுவிறுப்பினையும், அவரவருக்கு பிடித்த அணிகள், எதிரணியினரை அலறவிடுவதை கண்டு ரசிக்கவுமாகவே கூட இருக்கலாம்.

கிரிக்கெட் விளையாட்டின் மீதான மோகம் அதிகரிக்கப்பட காரணங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்ல. இந்திய கிரிக்கெட் அணிக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் நிலையில் உள்ளூர் போட்டியான ஐபிஎல்லும் அதிக பேரின் கவனத்தை ஈர்த்த ஒன்றாகவும் இருந்து வருகிறது.

போட்டியின் திருப்புமுனைக்கு பேட்ஸ்மேன், பவுலர், அணியின் பீல்டிங் என காரணமாக எது அமைந்தாலும் இந்த மூன்றையும் ஒரு சேர செய்யக்கூடிய ஆல்-ரவுண்டர்கள் மிக முக்கியமானவர்களாக பார்க்கப்படுகின்றார்கள்.

பேட்டிங் ஆல்-ரவுண்டர்கள், பவுலிங் ஆல்-ரவுண்டர்கள் என இரு விதமாக பார்க்கப்படும் இவர்கள், போட்டியில் தங்களது திறன்களை ஏதாவது ஒரு விதத்திலாவது வெளிப்படுத்த மாட்டார்களா? என்ற எண்ணத்தில் தான் அணியில் இணைக்கப்படுவார்கள்.

கபில்தேவிற்கு பிறகு இந்திய அணியில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் சிறந்து வழங்கக்கூடிய வீரரை காண்பது கணவாக இருந்து வந்தது.

Nitish Kumar Reddy

Nitish Kumar Reddy

இர்பான் பதான் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டார், ஆனால் அவர் அணியில் அதிக நாட்கள் நீடிக்க முடியாமல் போனது. பேட்டிங் திறனோடு பாஸ்ட் பவுலிங்கும் செய்யக்கூடிய ஒருவர் வர மாட்டாரா? என நினைக்க வைத்த நேரத்தில் தனது ஸ்பின் பவுலிங்கின் மூலம் விக்கெட்டுகளை வீழ்த்தியும், அசத்தலான பேட்டிங் திறன் கொண்டவராக வந்து சேர்ந்தார் யுவராஜ் சிங்.

இவரது சம காலத்தில் குறுகிய காலம் மட்டுமே விளையாடியிருந்தாலும், வாழ் நாள் முழுவதும் தன்னை ரசிகர்கள் நினைத்து பார்க்க வைத்த மற்றொருவர் சுரேஷ் ரெய்னா. மிடில் – ஆர்டர் பேட்மேனாக களமிறங்கியும் தனது சுழற்பந்து வீச்சாலும், அனாயசய பீல்டிங் திறமையாலும் பல போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற காரணமாக அமைந்தவர் இவர்.

இவர்கள் இருவருக்கு பிறகு இந்திய அணியின் பேர் சொல்லும் ஆல்-ரவுண்டர்களாக இருப்பவர்கள் ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்தர ஜடேஜா. இதில் பாண்டியாவைத் தவிர மற்ற இருவரும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அதிகமாக விளையாடி வருகின்றனர்.

காயத்தின் காரணமாக பாண்டியாவும் உலக்கோப்பை உள்ளிட்ட சில தொடர்களில் முழுமமையாக பங்கெடுக்க முடியாமல் போனது. வெங்கடேஷ் ஐயர், ஷிவக் தூபே இவர்கள் இருவரும் பாண்டியா இடத்தை நிரப்புவார்களா? என நினைக்கப்பட்டு வந்த நேரத்தில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்த தவறிவிட்டனர்.

தற்போது இந்த வரிசையில் புதுமுகமாக இந்திய அணிக்கு வந்திருக்கும் நிதிஷ் ரெட்டி. ஐபிஎல் போட்டியின் நடந்து முடிந்த தொடரில் தனது அதிரடியை காட்டியதால் தேர்வாளர்களின் கவனம் இவர் பக்கம் திரும்பியது.

வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்று வரும் இருபது ஓவர் தொடரில் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும் விதமான ஆட்டத்தையே காட்டி வருகிறார். அதிலும் நேற்று நடந்து முடிந்த இரண்டாவது போட்டியில் பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

பாண்டியாவிற்கு அடுத்த படியாக சிவம்தூபே தான் இருப்பார் என அதிகம் நினைக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய அணியின் மையம் கொண்டுள்ளது நிதிஷ் ரெட்டி என்னும் புதிய புயல். இருபது ஓவர்கள் போட்டிகளைக் காட்டிலும் ஐம்பது ஓவர் போட்டிகளுக்கே ஆல்-ரவுண்ட் பர்பாமன்ஸ் அதிகமாக தேவைப்படும்.

பங்களாதேஷுடனான தொடர் என்பதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, தென்-ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் போன்ற பலமிக்க எதிரிகளை இவர் எப்படி கையாளுவார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டிய நிலை இப்போதே ஏற்பட்டுவிட்டது. தொடர்ந்து தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா?, இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிப்பாரா? என்பதையும் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *