job news
10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்… ரயில்வேயில் 3,115 காலிப்பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…!
இந்திய ரயில்வேயில் 3,115 காலிபணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
மொத்த காலியிடங்கள்: 3,115
பயிற்சி: Trade Apprentice.
வயது வரம்பு: 15 முதல் 24க்குள்
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், தொழிற்பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். (10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்)
பயிற்சி வழங்கப்படும் டிரேடுகள்: Electrician/Plumber/Welder (Gas & Electric)/Diesel Mechanic/Machinist/Turner/Carpenter/ PSAA/Electronic Mechanic/Sheet Metal Worker/ Machine Tool Maintenance Mechanic/ COPA/Blacksmith/Wire man/Fitter/AC Mechanic/ DSL Fitter/ Lineman.
கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ₹100 மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
ஐடிஐ படிப்பில் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படும். அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது ரயில்வே விதிமுறைப்படி உதவி தொகையும் வழங்கப்படும். மேலும் எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்வே விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.rrcer.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.10.2024