Connect with us

latest news

வந்தாச்சு ISD பேக்… அதுவும் ரூபாய் 39 விலையில்… ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்ட அதிரடி ஆஃபர்…!

Published

on

இந்தியாவில் டெலிகிராம் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருப்பது ரிலையன்ஸ் ஜியோ. சமீபத்தில் தனது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய காரணத்தால் தற்போது ஜியோ நிறுவனம் புதிய சலுகைகளை அறிவித்திருக்கின்றது. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக சர்வதேச ஐஎஸ்டி ரீசார்ஜ் பேக்குகளை அறிவித்திருக்கின்றது. இந்த புதிய ஐஎஸ்டி ரீசார்ஜ் சலுகையின் விலை ரூபாய் 39 இல் துவங்கி அதிகபட்சம் 99 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது.

ஜியோ நிறுவனத்தின் இந்த அறிவிப்பை ஐஎஸ்டி மினி பேக் என்று அழைக்கப்பட்டு வருகின்றது. இந்த புதிய சலுகைகள் பயனாளர்களுக்கு எவ்வித கூடுதல் பலன்களும் இல்லாமல் குறிப்பிட்ட நிமிடங்களுக்கு சர்வதேச அழைப்புகளை பேசுவதற்கு அனுமதித்துள்ளது. குறுகிய காலகட்டத்திற்கு சர்வதேச அழைப்புகளை மேற்கொள்வதற்காக இந்த ரீசார்ஜ் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரூபாய் 39 விலையில் கிடைக்கும் சலுகையில் 30 நிமிடங்கள் வரை அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் உள்ள எண்களுக்கு நாம் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். வங்கதேசத்திற்கு ரூபாய் 49 ஒரு விலையில் 20 நிமிடங்கள் வரை பேசலாம் என்று தெரிவித்திருக்கின்றது. அதை தொடர்ந்து சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு அழைப்புகளை மேற்கொள்வதற்கு 15 நிமிடங்களுக்கு 49 ரூபாய் செலுத்த வேண்டும்.

ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு 15 நிமிடங்களுக்கு 69 ரூபாயும், பிரிட்டன், ஜெர்மன், பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளுக்கு 10 நிமிடங்களுக்கு 79 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிபெய்டு ரீசார்ஜுகள், ஜியோ ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு பயனாளர்களுக்கு வழங்கப்படுகின்றது. இவற்றின் வேலிடிட்டி ரீசார்ஜ் செய்ததிலிருந்து 7 நாட்கள் வரை மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

google news