Connect with us

Cricket

ரோகித் சர்மா ஏலத்தில் பங்கேற்றால்… அவர இந்த அணி இதனை கோடிக்கு எடுக்கும்… ஹர்பஜன்சிங் நம்பிக்கை…!

Published

on

ரோகித் சர்மாவை எந்த அணி ஏலத்தில் எடுக்கும், எத்தனை கோடிக்கு அவர் ஏலம் போவார் என்பது குறித்து ஹர்பஜன் சிங் தெரிவித்து இருக்கின்றார்.

ஒரு அணி எத்தனை வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்பது தொடர்பாக பிசிசிஐ அறிவித்திருக்கின்றது. ஒரு ஆணி 6 வீரர்களை தக்க வைக்க முடியும். அதில் ஒரு வீரர் நிச்சயம் அண்ட்கேப்ட் வீரராக இருக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. ஒரு அணி ஆறு வீரர்களில் எத்தனை வீரர்களை தக்கவைக்கவில்லையோ அத்தனை வீரரை ஆர்டிஎம் பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம்.

அதாவது ஒரு அணி ஐந்து வீரர்களை தக்க வைத்தால் ஒரு வீரரை ஆர்டிஎம்-ஐ பயன்படுத்தி எடுத்துக்கொள்ள முடியும். ஐபிஎல் ஏலத்தில் ரோகித் சர்மா கலந்து கொள்வாரா மாட்டாரா என்பதுதான் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கின்றது. ஒரு வேலை ரோகித் சர்மா ஏலத்தில் பங்கேற்றால் அவர் எத்தனை கோடிக்கு ஏலம் போவார். மேலும் அவரை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்வதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள்.

இந்த ஏலத்தில் ரோகித் பங்கேற்றால் அவரை எந்த அணி எத்தனை கோடி கொடுத்து வாங்கும் என்பது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் பிளேயர் ஹர்பஜன்சிங் கூறி இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘ரோஹித்துக்கு தற்போது 37 வயதாகின்றது. இருப்பினும் அவர் ஓப்பனராக கலந்து கொண்டு விளையாடி வருகின்றார், ஒருவேளை ரோகித் சர்மா ஏலத்தில் பங்கேற்றால் அவரை வாங்க 10 அணிகளும் போட்டி போடும்.

மும்பை இந்தியன்ஸ் முதற்கொண்டு ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணி உள்ளிட்ட அணிகள் ரோஹித் சர்மாவை வாங்குவதற்கு போட்டி போடுவார்கள். அதிலும் முக்கியமாக ஆர்சிபி அணி, பஞ்சாப் கிங்ஸ் அணி 30 கோடி வரை போட்டி போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை’ என்று தெரிவித்து இருக்கின்றார்.

ஐபிஎல்-யில் 5 முறை எட்டுக் கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக இருந்திருக்கின்றார். ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணி இவரை 10 கோடிக்கும் கீழ் தக்க வைக்க விரும்பினால் ரோகித் சர்மா நிச்சயம் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகுவதற்கு வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கின்றது

google news