Connect with us

Cricket

இந்தியா ஆடும் ஆட்டத்துக்கு இந்த பெயரையா வைக்கணும்… கம்பீரை வம்புக்கு இழுத்த சுனில் கவாஸ்கர்..!

Published

on

இந்தியா ஆடும் ஆட்டத்திற்கு கம்பால் என்ற பெயரை வைப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என்று கம்பீரை சீண்டி இருக்கின்றார் சுனில் கவாஸ்கர்.

இந்திய அணி சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இரண்டாவது டெஸ்டில் முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் நாளில் 35 ஓவர்களில் வெறும் 17 ரன்கள் மட்டுமே எடுத்தது. பிறகு ஆட்டம் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இரண்டாவது நாள், மூன்றாவது நாள் ஆட்டம் ரத்தானது. இதைத் தொடர்ந்து நான்காவது நாள் ஆட்டம் துவங்கிய போது வங்கதேச அணி 107 என்ற ரன்களில் இருந்து விளையாடியது.

ஆட்டம் ட்ராகத்தான் அதிக வாய்ப்பு இருந்தது. இந்நிலையில் வங்கதேசத்தை விரைந்து ஆல் அவுட் செய்த இந்திய அணி அதிரடி காட்டி 52 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து வங்கதேசத்தை 146 ரன்களுக்கு சுருட்டி 95 ரன்கள் இலக்கை 18 ஓவர்களில் எடுத்து இந்தியா அபார வெற்றியை கொடுத்தது.

இந்திய அணி சிறந்த வெற்றியை கொடுத்த காரணத்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பைனல் வாய்ப்பை பெற்றிருக்கின்றது எனவும், பலரும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை பாராட்டி வந்தார்கள். இங்கிலாந்து அணி பேஸ் பால் ஆட்டம் ஆடி வருகின்றது. இந்தியா கம்பால் ஆட்டம் ஆடுகின்றது என்று பலரும் புகழ்ந்து வந்தனர். இந்த கருத்திற்கு சுனில் கவாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றார்.

‘அதில் கம்பீரை ஏன் புகழ்கிறார்கள் என்று தெரியவில்லை, அவர்களெல்லாம் கிரிக்கெட் தெரியாத முட்டாள்கள் என்றுதான் கூற வேண்டும். இங்கிலாந்து டெஸ்ட் அணியானது, மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் வந்த பிறகு அடியோடு மாறி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றது. அதற்கு பேஸ் பால் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள். அது சரியான கருத்து.

ஆனால் இந்திய அணி சமீபத்தில் அதிரடியாக விளையாடி வங்காதேசத்தை வீழ்த்தியதற்கு கம்பால் ஆட்டம் என்று பெயர் வைத்தது எந்த விதத்தில் சரி.. கம்பீர் சமீபத்தில் தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். எனவே முழு அங்கீகாரமும் ரோகித் சர்மாவுக்கு தான் சென்றடைய வேண்டும். ஏனென்றால் கம்பீர் வந்த பிறகு ரோஹித் அதிரடியாக விளையாடவில்லை. கம்பீர் வருவதற்கு முன்பு ரோஹித் மிகச் சிறப்பாக விளையாடினார். இந்திய அணியை விளையாட ஊக்கப்படுத்தினார். கம்பால் ஆட்டம் என்பதற்கு பதிலாக ரோகித் ஆட்டம் என்றுதான் பெயர் வைக்க வேண்டும்’ என்று தெரிவித்திருக்கின்றார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *