Connect with us

Cricket

ரோகித் சர்மாவுக்கு மீண்டும் கேப்டன் பதவியா..? மும்பை இந்தியன்ஸ் கொடுத்த அப்டேட்… செம குஷியில் ரசிகர்கள்…!

Published

on

ரோகித் சர்மா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருப்பதாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

ஐபிஎல் போட்டிகளில் எப்போதும் முன் நிலையில் இருப்பது மும்பை இந்தியன்ஸ் அணி. இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் ஐந்து முறை கப்பு வென்று அசதி இருக்கின்றது. கடந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேடிங் மூலம் ஹர்திக் பாண்டியா கேப்டனாக வந்த பிறகு பல பிரச்சினைகள் அணிக்குள் வந்தது.

களத்தில் ரோகித் சர்மா ஏதாவது ஆலோசனை கூறினால் அதனை புறக்கணிப்பது, ரோகித்தை வேண்டுமென்றே பவுண்டரி லைனில் நிற்க வைப்பது, இம்பேக்ட் வீரராக களம் இறக்கியது என்று ஹர்திக் பாண்டியா பல தவறுகளை செய்தார். துவக்கத்தில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணி இறுதியில் வெறும் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது.

பின்னர் பிளே ஆப் சுற்றுக்குள் வராமல் இந்த அணி வெளியே சென்றது. மேலும் அணியில் கேப்டன் வீரர்களாக ரோகித்துக்கு அடுத்ததாக சூரியகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோர் இருக்கும் நிலையில் ஹர்திக்கை டிரேடிங்கில் வாங்கி அவருக்கு கேப்டன் பதவியை கொடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. பும்ரா, சூரியகுமார், யாதவ் ரோஹித் போன்றவர்களுக்கு இதில் உடன்பாடு இல்லை.

ஹர்திக்கு கேப்டன் பதவியை கொடுத்த பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கி வந்தது. இது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகிகளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் சமீபத்தில் டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ரோகித் சர்மாவை மேலும் இரண்டு சீசன்ங்களில் கேப்டனாக விளையாட வைக்கலாமா? என்பது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது.

ஹர்திக்கை டிரேடிங் மூலம் வாங்கி கேப்டனாக நியமிக்க முழு காரணமாக இருந்தவர் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தான். இந்நிலையில் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி 2022 வரை பயிற்சியாளராக இருந்த மகிலா ஜெயவர்தினேவை அந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் புதிய தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ள மகிலா ஜெயவர்தினே ரோகித் சர்மாவுக்கு மீண்டும் கேப்டன் பதவி வழங்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றது என்று கூறப்படுகின்றது. மேலும் இரண்டு வருடங்களுக்கு பிறகு சூர்யகுமார் யாதவுக்கு கேப்டன் பதவியை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றது. இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கின்றது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *