Connect with us

job news

பட்டதாரிகள் கவனத்திற்கு..! மாதம் ரூ.25,000 சம்பளத்தில் அரசாங்க வேலை..!

Published

on

ACTREC Recruitment 2023

புற்றுநோய்க்கான சிகிச்சை ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான மேம்பட்ட மையம் (Advanced Centre for Treatment Research and Education in Cancer – ACTREC) தனது டாடா மெமோரியல் சென்டரில் காலியாக உள்ள பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்ப்புக்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ACTREC அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:

புற்றுநோய்க்கான சிகிச்சை ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான மேம்பட்ட மையம் (ACTREC) காலியாக உள்ள நிர்வாக உதவியாளர் (Administrative Assistant) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்காக 1 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது. எனவே, ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் தாமதிக்காமல் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பதாரரின் வயது:

நிர்வாக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர் வயது 21 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அனுபவத்தின் அடிப்படையில் தளர்வு இருக்கலாம்.

விண்ணப்பதாரரின் தகுதி:

விண்ணப்பதார் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நல்ல தட்டச்சு வேகம் மற்றும் கணினி அறிவுத்திறன் கொண்டிருக்கவேண்டும். இரவு பணி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் உள்ளிட்ட ஷிப்ட் பணிகளில் பணியாற்ற வேண்டும். கணக்கியல், பிரண்ட் ஆபீஸ், எச்ஆர் தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 1 வருட அனுபவம் கட்டாயம் வேண்டும்.
தேர்வு முறை மற்றும் நேரம்:
இந்த பணிக்கான தேர்வு நேர்காணல் முறைப்படி நடக்கவுள்ளது. மேற்கூறிய தேவைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் ஜூன் 2ம் தேதி (வெள்ளிக்கிழமை) 2வது தளம், ஆஷா நிவாஸ், TMC-ACTREC, Sec-22, கார்கர், நவி மும்பை – 410210 என்ற முகவரியில் அனைத்து சான்றிதழ்களின் அசல்/நகல்களுடன் நேர்காணலுக்கு வேண்டும். நேர்காணலுக்கு காலை 10.00 மணி முதல் 10.30 மணிக்குள் வன்ஹிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

நிர்வாக உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.22,600 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். இந்த பணி குறித்த மேலும் விவரங்களுக்கு ACTREC அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *