Connect with us

india

மழைக்காலங்களில் மஞ்சள், ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் சொல்றாங்களே… அத பத்தி உங்களுக்கு தெரியுமா..?

Published

on

மழைக்காலங்களில் வானிலை ஆய்வு மையம் மஞ்சள், ஆரஞ்சு மற்றும் ரெட் எச்சரிக்கை என்று கூறும் அது குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

சென்னையில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருக்கின்றது. சென்னையில் காலை முதலே பெய்து வந்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு என்று மழையின் அளவைப் பொறுத்து எச்சரிக்கை கொடுக்கும், அப்படியென்றால் என்ன இதற்கான வித்தியாசம் குறித்து இதில் நாம் தெளிவாக தெரிந்து கொள்வோம். மக்களுக்கு பொதுவாக வானிலை ஆய்வு மையம் மழையை லேசான மழை, மிதமான மழை, கன மழை என்ற வகைப்படுத்தும். அது மட்டும் இல்லாமல் மஞ்சள், ஆரஞ்சு, ரெட் அலர்ட் என வகைப்படுத்தும்.

  • லேசான மழை என்றால் ஒரு சென்டிமீட்டர் அளவிலான மழையை அதாவது 10 மில்லி மீட்டர் மழையை தான் லேசான மழை என்று கூறுவார்கள்.
  • மிதமான மழை என்றால் மழையின் அளவு 2 சென்டிமீட்டர் முதல் 6 சென்டிமீட்டர் வரை பதிவாகி இருக்கும்.
  • மஞ்சள் அலர்ட் என்றால் மழையின் அளவானது 7 சென்டிமீட்டர் அல்லது அதற்கு மேல் பதிவாகி இருக்கும் மழைப்பொழிவு தான் மஞ்சள் அலர்ட் என்று கூறப்படுகின்றது. இதனை தான் நாம் கனமழை என்று கூறப்படுகின்றது. மழையின் அளவு 7 சென்டிமீட்டர் முதல் 11 சென்டிமீட்டர் வரை பதிவாகும் கனமழைக்கு மஞ்சள் அலர்ட் என்று கூறுகிறார்கள்.
  • ஆரஞ்சு அலர்ட் என்றால் மிக கனமழையை குறிக்கும் ஒரு பகுதியில் 12 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் அளவிற்கு பதிவாகும் மழையை மிக கன மழை என்று கூறுவார்கள்.  இந்த மழையின் அளவை ஆரஞ்சு அலர்ட் என்று எச்சரிப்பார்கள்.
  • ரெட் அலர்ட் : அதி தீவிர கனமழையை தான் ரெட் அலர்ட் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கும். அதாவது 21 சென்டிமீட்டருக்கு மேல் பதிவாகும் மழை பொழிவை அதிதீவிர கனமழை என குறிப்பிட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுக்கும்.

இப்படி மழையின் அளவைப் பொருத்தும், அதற்காக விடப்படும் அலர்ட்டை பொறுத்தும் அதற்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சென்னைக்கும் அடுத்த இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து அதிதீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

google news