Cricket
இந்தியா டெஸ்ட் ஸ்கோர்கள்.. டாப் 10 லிஸ்ட் பாருங்க.. 46 பரவாயில்லனு தோணும்..!
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்க இருந்தது. எனினும்ஸ கனமழை காரணமாக நேற்று டாஸ் கூட போடப்படாமல், முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை டாசுடன் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் முதலில் பேட் செய்வதாக அறிவித்து களமிறங்கினார். எனினும், வந்த வேகத்தில் 2 ரன்களை மட்டும் அடித்து அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய ஜெய்ஸ்வால் நீண்ட நேரம் போராடி 13 ரன்களை எடுத்தார். இவரும் ரூர்கி பந்தில் அவுட் ஆக அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ரிஷப் பண்ட் மட்டும் 20 ரன்களை அடிக்க மற்றவர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதில், விராட் கோலி, சர்ஃபராஸ் கான், கே.எல். ராகுல், ஜடேஜா மற்றும் அஷ்வின் என இந்திய அணியின் ஐந்து வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிகக்குறைந்த ஸ்கோர்கள்:
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2020 ஆம் ஆண்டு 36 ரன்கள்
- இங்கிலாந்துக்கு எதிராக 1974 ஆம் ஆண்டு 42 ரன்கள்
- நியூசிலாந்துக்கு எதிராக 2024 ஆம் ஆண்டு 46 ரன்கள் (இன்றைய போட்டி)
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1947 ஆம் ஆண்டு 58 ரன்கள்
- இங்கிலாந்துக்கு எதிராக 1952 ஆம் ஆண்டு 58 ரன்கள்
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 1996 ஆம் ஆண்டு 66 ரன்கள்
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1948 ஆம் ஆண்டு 67 ரன்கள்
- வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 1987 ஆம் ஆண்டு 75 ரன்கள்
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2008 ஆம் ஆண்டு 76 ரன்கள்
- இங்கிலாந்துக்கு எதிராக 2021 ஆம் ஆண்டு 78 ரன்கள்