Connect with us

latest news

சூப்பர் ஸ்பெக்ஸ், கம்மி விலை.. அசத்தல் லேப்டாப் அறிமுகம்..!

Published

on

இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புது லேப்டாப் மாடல்- இன்புக் ஏர்ப்ரோ பிளஸ் அறிமுகம் செய்தது. தொழில்துறையினர், கிரியேட்டர்கள் மற்றும் டாப் எண்ட் அம்சங்களை எதிர்பார்ப்போரை குறிவைத்து இந்த மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், குறைந்த எடை, சூப்பர் டிசைன் மற்றும் எளிதில் கொண்டு செல்லும் வகையில் உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை இந்த லேப்டாப்பில் 13th Gen இன்டெல் கோர் i5 பிராசஸர், 16GB வரையிலான ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை பவர் யூசர்களுக்கும் ஏற்ற வேகம் கொடுப்பதோடு சீராகவும் இயங்கும். இந்த லேப்டாப் எடை வெறும் 1 கிலோ மட்டும் தான். இதன் ப்ரோஃபைல் 4.5மில்லிமீட்டரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது அலுமினியம் மற்றும் மெக்னீசியம் அலாய் பில்டு கொண்டுள்ளது.

இதில் 14 இன்ச் 2.8K OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், இன்டெல் கோர் i5 1334U பிராசஸர், இன்டெல் ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ், 16GB ரேம், 512GB மெமரி வழங்கப்படுகிறது. இந்த லேப்டாப் 57 வாட் ஹவர் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதில் அதிகபட்சம் 65 வாட் வரையிலான சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் யுஎஸ்பி சி வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டிக்கு வைபை 6, ப்ளூடூத் 5.2 வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏஐ சார்ந்த பைலட் பட்டன், பேக்லிட் கீபோர்டு, FHD+ IR வெப்கேமரா மற்றும் விண்டோஸ் ஹெலோ ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்படுகிறது. இந்தியாவில் புதிய இன்பினிக்ஸ் இன்புக் ஏர்ப்ரோ பிளஸ் விலை ரூ. 49,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 22 ஆம் தேதி துவங்குகிறது.

google news