india
ஏர் பிரைல காபியா…? புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்களே… வைரலாகும் வீடியோ…!
வறுக்கும் கருவியில் இளம்பெண் ஒருவர் டீ தயாரித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
எண்ணெய் இல்லாமல் உணவு பண்டங்களை மிகவும் மொறு மொறுப்பாக வறுத்து எடுப்பதற்காக ஏர் ட்ரையர் என்ற எலக்ட்ரானிக் கருவியை அறிமுகம் செய்திருக்கிறார்கள். இது இல்லத்தரசிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றது. இதை பயன்படுத்தி உருளைக்கிழங்கு சிப்ஸ், பிரான்ச் பிரைஸ் போன்றவற்றை எண்ணெய் இல்லாமல் விரைவில் சமைக்க முடிகின்றது.
ஆனால் இதில் டீ, காபி போட முடியுமா? என்பதை தயாரிப்பு நிறுவனங்கள் கூட யோசித்து இருக்காது. ஆனால் நம் இல்லத்தரசிகள் அப்படியா? எதையும் வித்தியாசமாக யோசிக்கும் கில்லாடிகள் ஆயிற்றே அப்படி நேரடியாக பிளாஸ்டிக் டம்ளரை பிரேயர் கருவியில் வைத்து டீ போட்டு காட்டி இருக்கின்றார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி பலரையும் கவர்ந்திருக்கின்றது.
வீட்டில் ஒருவர் மட்டும் இருக்கும் சமயத்தில் டீ போடுவதற்கு ரொம்பவும் சலிப்பாக இருக்கும், ஆனால் டீ குடிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குத் தோன்றும். அந்த ரகத்தை சேர்ந்த பெண் ஒருவர் டீ கோப்பையில் நேரடியாக டீத்தூளையும் அரைக்கப் தண்ணீரையும், சர்க்கரையையும் சேர்த்து ப்ரையரில் வைக்கின்றார். உள்ளே சில பிரெஞ்சு ப்ரை இருக்கின்றது. அதன் அருகிலேயே டம்ளரை வைத்து ஆறு நிமிடம் செட் செய்து கருவியை இயக்குகின்றார். சிறிது பால் சேர்த்து கொதிக்க வைக்கின்றார். சிறிது நேரத்தில் சூடான டீயை தயாரித்து பருகுகின்றார். இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி மிக வைரலாகி வருகின்றது.
View this post on Instagram