Connect with us

latest news

ரூ. 749 திட்டத்தில் 3 சிம்கார்டு… அதுவும் 5g டேட்டா… ஜியோ கஸ்டமர்களுக்கு ஒரே குஷி தான்…!

Published

on

ஜியோ நிறுவனம் தனது கஸ்டமர்களுக்காக சிறப்பான அன்லிமிடெட் வாய்ஸ் கால், 100 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் 5 ஜிபி டேட்டா போன்ற பல சலுகைகளை கொடுக்கின்றது. இந்த திட்டத்தில் கூடுதலாக பேமிலி சிம் கார்டுகளை இணைத்துக்கொள்ள முடியும். இந்த சிம் கார்டுகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா சலுகைகளை கொடுக்கின்றது. இந்த திட்டம் தொடர்பாக இந்த தொகுப்பில் நாம் தெளிவாக பார்க்கலாம்.

ஜியோ ரூ. 749 திட்டம்:

இந்த திட்டம் போஸ்ட் பெய்டு திட்டத்தில் வருகின்றது. இதில் அன்லிமிடெட் 5 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகின்றது. இந்த டேட்டா சலுகை மட்டும் அல்லாமல் 100 ஜிபி டேட்டாவையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 100 ஒரு ஜிபிக்கு பிறகு பயன்படுத்தும் ஒவ்வொரு ஜிபிக்கும் ரூபாய் 10 கட்டணமாக வசூல் செய்யப்படுகின்றது. இந்த போஸ்ட் பெய்டு திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் கால், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை பெற முடியும்.

நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் பெற முடியும். இந்த சலுகை போக netflix பேஸிக் சந்தா மற்றும் அமேசான் ப்ரைம் லைட் சந்தாவும் கிடைக்கின்றது. இந்த சந்தாவை இரண்டு வருடங்களுக்கு நீங்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஓடிடி சந்தா போக வழக்கமாக கிடைக்கும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய சந்தாவும் கொடுக்கப்படுகின்றது.

இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் ஃபேமிலி சிம் கார்டு கனெக்சனும் உள்ளது. இதன் மூலம் நீங்கள் மூன்று சிம்கார்டுகளை இணைக்க முடியும். இந்த சிம் கார்டுகளுக்கும் அன்லிமிடெட் லோக்கல் கால்ஸ், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை பெற முடியும். அதேபோல டேட்டா சலுகைகளும் இதில் கிடைக்கின்றது. கூடுதலாக சிம்கார்டுகளுக்கு 5gb டேட்டா சலுகை கொடுக்கப்படுகின்றது.

இதை மாதத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதல் சிம்கார்டுக்கும் வெறும் 150 ரூபாய் கட்டணம் மட்டுமே வசூல் செய்யப்படுகின்றது. இந்த போஸ்ட் பெய்டு திட்டத்தின் விலை 749 ரூபாய் ஆகும். அதே சமயம் கூடுதல் சிம்காடுக்கு 150 செலவு செய்தால் இரண்டு சிம் கார்டுகளுக்கும் டேட்டா, வாய்ஸ் கால்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த திட்டத்திற்கான வேலிடிட்டி மாதாந்திர கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. கம்மி விலையில் ஒவ்வொரு சிம் கார்டுக்கும் இந்த திட்டம் இருக்கின்றது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *