india
கிரெடிட் கார்டில் தீபாவளிக்கு ஷாப்பிங் பண்ண போறீங்களா…? அப்ப இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க…!
தீபாவளிக்கு உங்கள் கிரெடிட் கார்டை வைத்து நீங்கள் ஷாப்பிங் செய்வதாக இருந்தால் சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது. இந்த சமயத்தில் பலர் அதிகமான ஷாப்பிங் செய்வார்கள். கிரெடிட் கார்டுகளை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். இதில் சில பிரச்சினைகள் இருக்கின்றது. இது போன்ற சமயங்களில் மோசடிகளும் அதிக அளவில் நடைபெறுகின்றது. இந்த நேரத்தில் நீங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்துவதாக இருந்தால் மிக கவனமாக பயன்படுத்த வேண்டும்.
இந்த கார்டு எவ்வளவு வசதியாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். சில சமயங்களில் நமக்கு தேவைக்கு அதிகமாக செலவு செய்து கிரெடிட் கார்டு வரம்பை மீறி விடுகின்றோம். இது வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ நடப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் உங்கள் கிரெடிட் கார்ட் ஸ்கோரில் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.
நீண்ட காலத்திற்கு உங்களுக்கு சிக்கலை கொடுக்கும். கிரெடிட் கார்டு வரம்பைவிட அதிகமாக செலவு செய்வதால் பல தீமைகள் ஏற்படுகின்றது. கிரெடிட் கார்டு வரம்பை விட அதிகமாக செலவு செய்யும் போது பெரும்பாலான வங்கிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. அது 100 ரூபாய் முதல் ஆரம்பித்து ஆயிரக்கணக்கான வரை இருக்கலாம். இது உங்கள் பட்ஜெட்டையே கெடுத்து விடுகின்றது.
உங்கள் கடன் வரம்பை அதிகமாக பயன்படுத்தும் போது உங்கள் கடன் பயன்பாட்டு விகிதம் அதிகமாக உள்ளது. இந்த விகிதம் உங்கள் கிரெடிட் கார்டை மிக பாதிக்கின்றது. அதிக கடன் பயன்பாட்டு விகிதம் உங்கள் கிரெடிட் கார்டை அதிகபட்சமாக பயன்படுத்துகிறீர்கள் என்பதை காட்டும். இது கடன் வழங்குபவர்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை தான் ஏற்படுத்தும். குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தால் நீங்கள் எதிர்காலத்தில் எந்தவிதமான லோன் அதாவது வீட்டுக் கடன், கார் கடன் அல்லது பிற வகையான கடன்களை பெறுவதில் சிரமம் ஏற்படலாம்.
கிரெடிட் கார்டு சிக்கலில் இருந்து தவிர்ப்பதற்கு மாதாந்திர பட்ஜெட்டை உருவாக்க வேண்டும். அதில் உங்கள் செலவுகளை கணக்கிட வேண்டும். முடிந்தவரை பணமாக பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு கிரெடிட் கார்டு பில்களுக்கு தானாக பணம் செலுத்தும் முறையை அமைக்கலாம் . நீங்கள் பணம் செலுத்துவதை தவறவிட மாட்டீர்கள். உங்களிடம் குறைவான கிரெடிட் கார்டுகள் இருந்தால் நீங்கள் குறைவாக செலவழிப்பீர்கள்.
அதாவது ஒரு கிரெடிட் கார்டை வைத்திருப்பது என்பது மிக நல்லது. உங்கள் கடன் வரம்பு குறைவாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் உங்கள் வங்கியில் இருந்து கடன் வரம்பு அதிகரிப்பதற்கு விண்ணப்பிக்கலாம். கிரெடிட் கார்டு மிக பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அதை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே. வரவுக்கு மேல் செலவு செய்தால் அது பல பிரச்சனைகளை கொடுக்கும். எனவே உங்கள் செலவுகளை கண்காணித்து உங்கள் கடன் வரம்பிற்குள் செலவு செய்வது மிகவும் நல்லது. கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க வேண்டும் என்றால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பில் 30 சதவீதம் வரை பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.