Connect with us

Cricket

தோல்விக்கு இவங்க தான் காரணம்… சீனியர் பிளேயரை கைகாட்டிய கம்பீர்… அணி மீட்டிங்கில் நடந்த விவாதம்..!

Published

on

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பிறகு அணி மீட்டிங்கில் கம்பீர் காட்டமாக பேசி இருப்பதாக கூறப்படுகின்றது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 46 ரன்கள் ஆல் அவுட் ஆனது. ரிஷப் பந்த் 20 ரன்கள், யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 13 ரன்கள் என்று இருவர் மட்டுமே இரண்டு இலக்கங்களில் ரன்களை எடுத்தார்கள். மற்ற அனைவரும் ஒரு இலக்க எண்ணில் ரன்களை எடுத்து அவுட் ஆனார்கள்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சில் களம் இறங்கிய நியூஸிலாந்து அணியில் டிவோன் கான்வே 91 (105), வில் யங் 33 (73) ஓரளவுகளுக்கு ரன்களை சேர்த்தார். கேப்டன் டாம் லதாம் 15 (49), டேரில் மிட்செல் 18 (49), டாம் பிளெண்டில் 5 (8), கிளென் பிலிப்ஸ் 14 (18) ஆகியோர் நல்ல ரன்களை குவிக்க ஸ்கோர் கடகடவென்று உயர்ந்து நியூசிலாந்து அணி 356 ரன்கள் பெற்று முன்னிலையில் இருந்தது.

அதன் பிறகு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 52 ரன்கள், விராட் கோலி 70 ரன்கள், சர்பரஸ் கான் 150 ரன்கள், ரிஷப் பந்த் 99 ரன்கள் என்று அதிரடியாக விளையாடி 433/4 விக்கெட் என்ற நிலையில் இருந்தது. அடுத்ததாக யாரும் எதிர்பார்க்காத வகையில் அடுத்து வந்த கே எல் ராகுல் 12 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 5 ரன்கள், அஸ்வின் 15 ரன்கள் போன்ற படுமோசமாக விளையாடி சொதப்பியதால் இந்திய அணி 462 ரன்களுக்கு ஆள் அவுட் ஆனது.

நியூசிலாந்துக்கு 107 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. 5-வது நாளில் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக பந்து வீச வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். இந்நிலையில் முதல் ஓவரை பும்ரா வீசினார். இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணியை சேர்ந்த அனைவரும் சிறப்பாக விளையாடியதால் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 102 ரன்களை சேர்த்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

போட்டு முடிந்த பிறகு நடைபெற்ற மீட்டிங்கில் கௌதம் கம்பீர் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்-க்கு சாதகமாக இருந்தும் அதில் கே.எல் ராகுல் சிறப்பாக விளையாடவில்லை. சர்பரஸ் கான், ரிஷப் பந்த் போனதற்குப் பிறகு கே எல் ராகுல் நல்ல ஸ்கோர் அடித்திருக்க வேண்டும். அப்படி அடித்திருந்தால் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்திருக்கும். இது மிகப்பெரிய தவறு. மற்றபடி முதல் இன்னிங்ஸில் இவ்வளவு பெரிய பின்னடைவை பெற்று இறுதிவரை போராடியது நமது வலிமையை காட்டுகின்றது என்று தெரிவித்து இருக்கின்றார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *