latest news
அடோப் சேவைகளில் சைபர் தாக்குதல் ஈசி தான்.. அரசு எச்சரிக்கை
சைபர் பாதுகாப்பு குறித்து இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களில் அடோப் நிறுவன சேவைகளில் ஏராளமான பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இவை பயனர்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்று CERT-In தெரிவித்துள்ளது. இந்த பாதுகாப்பு குறைபாடுகளை ஹேக்கர்கள் தவறாக பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்.
ஹேக்கர்கள் இந்த பாதுகாப்பு குறைபாடுகளின் மூலம் பயனர் சிஸ்டம்களில் ஊடுறுவி மிகமுக்கிய தரவுகளை சேகரிக்க முடியும். அடோப் சேவைகளில் ஏராளமான தொழில்நுட்ப குறைகள், ஓவர்-ஃப்ளோ எரர்கள் மற்றும் உறுதிப்படுத்தும் முகமைகளில் பிழைகள் உள்ளதாக CERT-In தெரிவித்துள்ளது. இவை ஹேக்கர்களுக்கு சைபர் தாக்குதல்களை எளிமைப்படுத்தும்.
மேலும் தகவல் திருட்டு, நிதி இழப்புகள் மற்றும் தனிநபர் மதிப்பை கெடுக்க காரணமாக அமையும். வெற்றிகரமாக ஹேக் செய்யப்பட்டால், இந்த குறைபாடுகள் பயனர்களின் மிகமுக்கிய குறியீடு, சேவைகளை இயக்கும் முழு வசதி, பாதுகாப்பு அம்சங்களை இயக்கும் வசதி உள்ளிட்டவைகளை பெற முடியும் என்று CERT-In தெரிவித்துள்ளது.
இந்த பாதிப்புகள் அடோப் நிறுவனத்தின் ஃபிரேம்மேக்கர், இன்டிசைன், இன்காப்பி, லைட்ரூம், அனிமேட் மற்றும் அடோப் காமர்ஸ் உள்ளிட்டவைகளின் குறிப்பிட்ட வெர்ஷன்களில் கண்டறியப்பட்டுள்ளன.
பாதுகாப்பு குறைபாடுகள் கொண்ட சேவைகளில் இருந்து பத்திரமாக இருக்க பயனர்கள் தங்களது மென்பொருளை உடனே அப்டேட் செய்ய வேண்டும் என்று CERT-In வலியுறுத்துகிறது. அப்டேட்களில் அடோப் வெளியிடும் அதிநவீன பேட்ச்கள் மற்றும் அப்டேட்கள் இடம்பெற்று இருக்கிறது. இவை பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்யும். அடோப்-இன் அதிநவீன வெர்ஷன்கள் தொடர்பான விவரங்களை அடோப் செக்யூரிட்டி தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
- இதுதவிர பயனர்கள் அடிக்கடி அடோப் சேவைகளின் செக்யூரிட்டி செட்டிங்களை சரிபார்க்க வேண்டும். தரவுகள் பாதுகாப்பு தொடர்பான செட்டிங்கள் சரியாக உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- சரியான ஆன்டிவைரஸ் மென்பொருள் கொண்டு தேவையற்ற செயல்பாடுகளை கண்டறிந்து கொள்ள வேண்டும். துவக்கத்திலேயே பிரச்சினைகளை கண்டறிதல், அதனை சரிசெய்யும் வழிமுறையை வேகப்படுத்தும்.
- தொடர்ச்சியாக தரவுகளை பேக்கப் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது சைபர் தாக்குதலின் போது மிக முக்கிய விவரங்களை பாதுகாப்பாக வைக்க உதவும்.