Connect with us

Cricket

3 மணி நேரம் விளையாடியத வச்சு இந்திய அணிய மோசமா எடைப்போடாதீங்க… கொந்தளித்த ரோஹித் சர்மா…!

Published

on

மூன்று மணி நேரம் நாங்கள் மோசமாக ஆடியதை வைத்து இந்திய அணியை மதிப்பிட முடியாது என்று ரோகித் சர்மா கூறியிருக்கின்றார்.

பெங்களூருவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா நிருபர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர் தெரிவித்திருந்ததாவது: “உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இந்த டெஸ்ட் குறித்து நான் அதிகமாக கவலைப்பட போவதில்லை. ஏனெனில் முதல் இன்னிங்சில் அந்த 3 மணி நேரத்தில் மோசமாக விளையாடியதை வைத்து இந்திய அணி எப்படிப்பட்டது என்று மதிப்பிடுவது நியாயமாக இருக்காது.

தொடர்ந்து நம்பிக்கையான விஷயங்களை பகிர்வது முக்கியம். சாதகமான அம்சங்களை எடுத்துக்கொண்டோம். இந்த டெஸ்டில் சிறிய தவறின் விளைவால் தோல்வியை தழுவினோம். அதற்காக எல்லாம் முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. பதற்றமின்றி அமைதியான சூழலை உருவாக்கி மனதளவில் வலுவாக இருக்க நினைக்கின்றோம். தொடரின் முதல் டெஸ்டில் தோல்வி காணும் இது போன்ற சூழலை ஏற்கனவே சந்தித்த அனுபவம் உண்டு.

ஆண்டியின் தொடக்கத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முதல் டெஸ்டில் தோற்று அதன் பிறகு வரிசையாக நான்கு டெஸ்ட்களிலும் வெற்றி பெற்றோம். எனவே கிரிக்கெட்டில் இப்படி நடப்பது சகஜம். இன்னும் இரு டெஸ்ட் போட்டிகள் உள்ளது. அவற்றில் ஒரு அணியாக என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அடுத்த டெஸ்டில் சிறப்பாக ஆட முயற்சிப்போம். ஒரு போட்டியின் அடிப்படையில் எங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள மாட்டோம்.

முதல் இன்னிங்ஸில் நாங்கள் நன்றாக பேட் செய்யவில்லை. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் வந்தோம். முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் பின்தங்கி இருந்த போதும் இரண்டாவது இன்னிங்ஸில் அந்த ஸ்கோருக்குள் எளிதாக ஆல் அவுட்டாகி தோல்வியை சந்திக்க நேரிடலாம். இப்படிப்பட்ட நிலைமையில் இரண்டாவது இன்னிங்ஸில் எங்கள் வீரர்கள் சிறந்து விளையாட்டை வெளிப்படுத்தினார்கள்.

சில பாட்னர்ஷிப்பை பார்க்கவே உற்சாகமாக இருந்தது. ரிஷப் பண்டும், சர்ப்ராஸ்கானும் விளையாடிய போது ஒவ்வொருவரும் சீட்டின் நுனிக்கு வந்து விட்டோம். எல்லா பந்துகளையும் அடிக்காமல் சில பந்துகளை விட்டு தடுப்பாட்டத்திலும் ஈடுபட்டார். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டியின் காயம் குறித்து கேட்கிறீர்கள். பந்து தாக்கிய அதே காலில் தான் அவருக்கு விபத்தில் காயம் ஏற்பட்டது. அதனால் நாங்கள் அவரது விஷயத்தில் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அவருக்கு விக்கெட் கீப்பிங்ல் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டது என்று ரோகித் சர்மா பதில் அளித்து இருக்கின்றார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *