Connect with us

Featured

அப்பவே இருந்துச்சா நடமாடும் நூலகம்?…வருஷம் எதுன்னு தெரிஞ்சுக்கனுமா?…

Published

on

Library

காசு, பணம் சேர்த்து வைத்தால் அது கரைந்து கூட விடலாம். பொன், பொருள் சேர்த்து வைத்தால் அது காணாமல் கூட போயிவிடலாம். ஆனால் ஒருவர் கற்ற கல்வியே உயிர் போல கடைசி நிமிடம் வரை வாழ் நாள் முழுவதும் ஒட்டிக் கொண்டிருக்கும்.

கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினக்கின் பிணிபல – தெள்ளிதின்                      ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்                            பாலுண் குருகின் தெரிந்து – நாலடியார்: 135.

கல்வி கற்றலின் பெருமை குறித்து எல்லா மொழி இலக்கியங்களிலும் சொல்லப்பட்டிருக்கலாம், தமிழின் அதன் சிறப்பு பற்றி தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

Mobile Library

Mobile Library

கல்விக் கூடங்களில் கற்ற கல்வியை கூர்மை தீட்டிக்கொள்ளவவும், தெளிவினை மேலும் புத்தகங்கள் மூலம் அறிவைப் பெரிதாக்கவும் நூலகங்கள் உதவி வருகின்றன.

இத்தகைய பெருமை கொண்ட நூலகத்தின் பொருளை ‘நடமாடும் நூலகத்தின் மூலம் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே. முதல் முறை கேட்பவர்களுக்கு இந்த தகவல் ஆச்சரியத்தைக் கூட தரலாம்.

முதியோர் கல்வியை இலக்காகக் கொண்டு, எளிய தமிழில் தோட்டக்கலை, தேனீ வளர்ப்பும் குடிசைத் தொழில் மற்ரும் வருமானத்தை அதிகரிக்கும் முறைகளை பற்றிய புத்தகங்கள் பிரசூரிக்கப்பட்டு நடமாடும் நூலகத்தின் மூலம் விநியோகிக்கப்பட்டிருக்கிறது 1932ம் ஆண்டிலேயே.

எஸ்.வி.கனகசபை என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த நடமாடும் நூலகத்தை, எஸ்.ஆர்.ரங்கநாதன் துவக்கி வைத்திருக்கிறார் 1932ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதியன்று. மன்னார்குடியின் பெருமைகளில் ஒன்றான இந் நடமாடும் நூலகத் திட்டம், பின்னர் பல இடங்களில் துவக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. இந்நடமாடும் நூலகத்தின் மூலமாக 95 கிராமக் கிளைகளுக்கு புத்தகங்கள் இலவசமாக கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறது.

google news