Connect with us

india

அவரும் ஏழு…இவரும் ஏழு…பழிவாங்குமா?…பம்மி விடுமா?…இந்திய அணி…

Published

on

Indian Team

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது நியூஸிலாந்து அணி. பெங்களூருவில் நடந்த முதல் போட்டியில் இந்தியாவை எளிதாக வென்றது நியூஸிலாந்து. இந்நிலையில் தான் இரண்டாவது போட்டி புனேவில்  நடந்து வருகிறது. நேற்று துவங்கிய போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

259 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது நியூஸிலாந்து. நேற்று மாலை தனது முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணி துவக்கத்திலேயே கேப்டன் ரோஹித் சர்மாவின் விக்கெட்டினை பறிகொடுத்தது. இரண்டாம் நாளான இன்று கில், ஜெய்ஷ்வல் தங்களது பேட்டிங்கை துவக்கினர்.

ஆனால் நியூஸிலாந்து பவுலர்களின் பவுலிங் இந்தியாவை விட அபாரமாக இருந்ததால் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர் இந்திய பேட்ஸ்மேன்கள். 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இந்தியா. ஜடேஜா 38 ரன்களையும், ஜெய்ஷ்வல் 30 ரன்களையும் குவித்தனர். மற்ற வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இந்திய அணியின் பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை எடுத்தது போல.

Santner Washington

Santner Washington

நியூஸிலாந்து அணியின் ஆப்-ரவுண்டர் மிட்செல் சாண்ட்னர் 19.3 ஓவர்கள் மட்டுமே வீசி 53 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

தனது இரண்டாவது இன்னிங்ஸின் பேட்டிங்கை துவங்கி விளையாடி வரும் நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் 156 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

அந்த அணியின் தலைவர் டாம் லாத்தம் 86ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.   நியூஸிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் டாம் பிளன்டல் 30 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து வருகிறார்.முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த வாஷிங்டன் சுந்தர் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.இந்தியாவை விட நியூஸிலாந்து 300 ரன்களை பெற்றுள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கில் எழுச்சி பெற்று முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு நியூஸிலாந்து அணியை பழிவாங்குமா? அல்லது முதல் இன்னிங்ஸில் மோசமாக விளையாடியது போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் விளையாடி பம்மி விடுமா? என்ற எண்ணம் இருந்து வருகிறது ரசிகர்களின் மனதில்.

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் இந்திய அணி நடப்பு தொடரை இழந்து விடும். இது உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை வழிமறித்து விடும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *