Connect with us

latest news

4K ரெசல்யூஷன், Hyper ஓ.எஸ்.- ஸ்மார்ட் டிவியை அப்டேட் செய்த ரெட்மி

Published

on

சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்டு தனது ஸ்மார்ட் டிவி X 2025 மாடல்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மாடல்களின் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை இம்மாத இறுதி அல்லது அடுத்த மாத துவக்கத்தில் நடைபெறும்.

அம்சங்களை பொருத்தவரை புதிய ஸ்மார்ட் டிவி சீரிசில் 4K 38402160 பிக்சல் ரெசல்யூஷன், 240Hz ரெசல்யூஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேனல் HDR10+, டால்பி விஷன், MEMC, AI-SR சூப்பர் ரெசல்யூஷன் உள்ளது.

இத்துடன் கிங்ஷான் ஐ கேர் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கண்களில் ஏற்படும் சோர்வை குறைக்கிறது. இந்த டிவியில் குவாட் கோர் மீடியாடெக் MT9655 பிராசஸர் உள்ளது. இத்துடன் 4GB ரேம், 64GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய டிவி ஹைப்பர் ஓஎஸ் கொண்டுள்ளது. இத்துடன் சியோமி வாய்ஸ் கண்ட்ரோல் வசதி கொண்ட ஏஐ அசிஸ்டண்ட் சியோ ஏஐ வசதி வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு மூன்று HDMI 2.1 போர்ட்கள், eARC வசதி, வைபை 6, NFC, ப்ளூடூத் 5.2, ஏவி இன்புட், யுஎஸ்பி 3.0 மற்றும் யுஎஸ்பி 2.0 வழங்கப்பட்டுள்ளது. இந்த டிவியில் இரட்டை 25 வாட் ஸ்பீக்கர்கள் உள்ளன.

ரெட்மி ஸ்மார்ட் டிவி X 2025 சீரிஸ் மாடலின் 55 இன்ச் மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 30,700 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் 85 இன்ச் மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 70,800 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

google news