இந்திய சந்தையில் சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் பிரிவில் ரெட்மி A சீரிஸ் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுவாக இந்தியாவில் ரெட்மி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. எனினும், பண்டிகை நாட்கள் மற்றும் சிறப்பு தள்ளுபடி நாட்களில் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை சற்று குறைக்கப்படும்.
அந்த வரிசையில், ரெட்மி A4 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்திய சந்தையில் அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு அமேசான் இந்தியா வலைதளத்தில் அமலில் உள்ளது. இந்தியாவில் ரூ. 10,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ரெட்மி A4 5ஜி ஸ்மார்ட்போனின் விலை தற்போது சிறப்பு தள்ளுபடியின் கீழ் ரூ. 7,999 விலையில் கிடைக்கிறது.
இது ஸ்மார்ட்போனின் உண்மை விலையை விட ரூ. 3000 அதாவது 27 சதவீதம் குறைவு ஆகும். இதுதவிர இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் பிரைம் வாடிக்கையாளர்கள் அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது 5 சதவீதம் கேஷ்பேக், பிரைம் சந்தா இல்லாதவர்களுக்கு 3 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. எனினும், கேஷ்பேக் சலுகை மாத தவணை மற்றும் அமேசான் பிஸ்னஸ் பரிவர்த்தனைகளுக்கு பொருந்தாது.
இதுதவிர வட்டியில்லா மாத தவணை முறை வசதியும், ஜிஎஸ்டி விலைப்பட்டியல் கொண்ட வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு 28 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தற்போது இந்த சலுகை ரெட்மி A4 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மாடலுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை ரெட்மி A4 5ஜி மாடலில் 6.88 இன்ச் HD+ டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 4s ஜென் 2 5ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் (4ஜிபி விர்ச்சுவல் ரேம் உள்பட), 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், புகைப்படங்களை எடுக்க 50MP டூயல் பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 5160mAh பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஸ்மார்ட்போனுடன் 33 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஓ.எஸ். , 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது.