Cricket
கோலியும் காலி…மூனாவது நாளே முடிஞ்சிருமா ஜோலி?…
இந்திய ரசிகர்கள் யாருமே எதிர்பார்த்திராத அசாதாரன விளையாட்டை வெளிப்படுத்தி அதிர்ச்சியை கொடுத்தது பெங்களூருவில் நடந்து முடிந்த நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி.
இரண்டாவது போட்டியில் எகிறி அடிக்கும் , நியூஸிலாந்திற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கும் என இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பின் இடையே புனேவில் துவங்கியது இரண்டாவது டெஸ்ட் போட்டி. வாஷிங்டன் சுந்தரின் அபார பந்து வீச்சால் நியூஸிலாந்து அணி வீழ்ந்தது. அதை விட குறைவான ஸ்கோரில் ஸாண்ட்னரின் பவுலிங்கிற்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறி எடுத்தது இந்திய அணி.
முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 259 ரன்களுக்கும், இந்திய அணி 156 ரன்களுக்கும் ஆல்-அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸைப் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் அபாரமாக பந்து வீசினார் வாஷிங்டன் சுந்தர். 255 ரன்கள் எடுத்து இரண்டாவ்து இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது நியூஸிலாந்து.
இந்தப் போட்டியில் தோற்றால் தொடரை இழந்து விடுவதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்ற நெருக்கடியான நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸின் பேட்டிங்கை துவக்கியது இந்திய அணி.
ஸாண்ட்னரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது இந்திய அணி. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விராத் கோலி 40 பந்துகளில் 17 ரன்களை எடுத்து அவுட் ஆனார். ஜெய்ஷ்வல் மட்டும் 77 ரன்களை எடுத்தார். 38 ஓவர்களில் 168 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை பாதையை நோக்கி பயணித்து வருகிறது இந்தியா.
கடைசி கட்ட மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர்களான ரவிச்சந்திரன் அஷ்வினும், ரவீந்திர ஜடேஜாவும்.போட்டியின் மூன்றாவது நாளான இன்றே முடிவு கிடைத்து விடுமோ? என்ற அச்சம் இந்திய ரசிகர்களின் மனதை ஆட்டிப்படைத்து வருகிறது இப்போது.