Connect with us

Cricket

ரோகித் ஷர்மா செஞ்ச தப்பு… அதான் நியூசிலாந்து முன்னிலை பெற்றது… ரவி சாஸ்திரி தாக்கு..!

Published

on

ரோகித் சர்மா இந்த தவறை செய்ததால் தான் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது என்று ரவி சாஸ்திரி தெரிவித்து இருக்கின்றார்.

2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு டெஸ்ட் தொடரில் இந்தியா தொடர்ச்சியாக இரண்டு போட்டியில் 100+ ரன்களை விட்டுக் கொடுத்தது. அதன் பிறகு சொந்த மண்ணில் இந்தியா சொதப்பியதே கிடையாது. இந்தியா தொடர் வெற்றிகளை பெற்று தான் அசத்தி இருக்கின்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நியூசிலாந்தை தொடர்ந்து இரண்டு முறை 100 ரன்கள் முன்னிலை பெற வைத்துள்ளது.

இந்திய அணி முதல் டெஸ்டில் 365 ரன்கள் முன்னிலையைப் பெற்று நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தற்போது 2-வது டெஸ்டில் 301 ரன்கள் முன்னிலை பெற்று நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. புனே பீட்ச் சுழலுக்கு சாதகமாக இருப்பதால் இந்தியா பெரிய அளவில் போராடினால் தான் வெற்றியை பெற முடியும் என்ற நிலையில் இருக்கின்றது.

இருப்பினும் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவதால் பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி கொடுத்த ரவி சாஸ்திரி இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா செய்த தவறு குறித்து பேசி இருக்கின்றார். அதில் முதலில் இன்னிங்ஸில் நியூசிலாந்திடம் 100 ரன்கள் முன்னிலையை விட்டுக் கொடுத்தோம்.

இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்தை 120 ரன்கள் சுருட்ட வேண்டும் என்ற மனநிலையில் பந்து வீசி இருக்க வேண்டும். ஆனால் இந்தியா அப்படி செய்யவில்லை. டிபென்சி மனநிலையில்தான் இந்தியா இருந்தது. பவுண்டரியை தடுத்தால் போதும் என்ற மனநிலை இந்தியாவுக்கு இருந்திருக்கின்றது.

நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அழுத்தம் இல்லாமல் விளையாடினார்கள். அழுத்தம் அனைத்தும் இந்திய பவுலர்கள் மீது சென்றது. அட்டாக்கிங் பீல்டு செட் அப் செய்திருந்தால் பவுலர்களும் நம்பிக்கையுடன் பந்து வீசி செயல்பட்டு இருப்பார்கள். இந்த விஷயத்தில் கேப்டன் ரோகித் சர்மா தவறான முடிவு நியூசிலாந்து தற்போது 301 ரன்கள் முன்னிலையில் இருக்கின்றது என்று கூறி இருக்கின்றார்.

google news