Cricket
சும்மா ரோகித்-ஐ மட்டும் குறை சொல்லாதீங்க – முன்னாள் வீரர் அதிரடி
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தது பற்றி பேசிய முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல், இந்திய அணி பேட்டர்கள் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு பேட் செய்யும் திறமை குறைந்திருப்பதாக கருத்து தெரிவித்து இருந்தார். இதுபற்றி பேசும் போது, “இந்திய பேட்டர்கள் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு சிறப்பாக ஆடிய காலம் முடிந்துவிட்டது,” என்று தெரிவித்தார்.
டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றிய பிறகு பேசிய சைமன் டவுல், “நல்ல விக்கெட்டுகளில் விளையாடி பழகி இருக்கும் என்று நினைக்கிறேன். அதன்பிறகு பந்து திரும்ப ஆரம்பிக்கும் போது, உங்கள் யுக்திகள் ஓரளவுக்கு வெளப்பட துவங்கும். நீண்ட காலத்திற்கு, இந்தியா திரும்பும் ஆடுகளங்களில் விளையாடிக் கொண்டிருந்த போது, அவர்களிடம் உலகத் தரம் மிக்க சுழற்பந்து வீச்சாளர்களான ஜடேஜா மற்றும் அஷ்வின் இருந்தனர்.”
“அவர்களால் போட்டியை மாற்ற முடிந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து பேட்டர்கள் அதை எதிர்கொண்டு விட்டனர், என்றால் அது உலகத் தரம் மிக்க சுழற்பந்து வீச்சு இல்லை என்பதே அர்த்தமாகும். இது ஓரளவுக்கு பிரச்சினைக்குரிய விஷயம் தான்.”
“பலரும் ரோகித் மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். ஆனால், பந்துவீச்சாளர்கள் பக்கமும் வர வேண்டும். மிக மிக மூத்த வீரர்கள் அணியில் உள்ளனர். உங்களால் அஷ்வின் அல்லது ஜடேஜாவை நம்பி அவர்களது சொந்த ஃபீல்டிங் அமைக்க ஒத்துழைக்கவில்லை என்றால், ரோகித்-ஐ மட்டும் குறை கூறக்கூடாது. பந்துவீச்சாளர்களும் தங்கள் பணியை ஓரளவுக்கு செய்ய வேண்டும்,” என்று தெரிவித்தார்.