Connect with us

Cricket

IPL 2025: கப்-ல RCB பெயரை எழுதுங்க.. கிங் is Back…!

Published

on

ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி மீண்டும் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக 2013 ஆம் ஆண்டு துவங்கி 2021 ஆம் ஆண்டு வரை விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக செயல்பட்டார். பிறகு 14-வது ஐ.பி.எல். சீசனில் கேப்டன்சி பொறுப்பை விட்டுக்கொடுப்பதாக விராட் கோலி அறிவித்தார்.

இதன் பிறகு தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த ஃபாப் டூ பிளெசிஸ் 2022 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். அடுத்த மாதம் ஐ.பி.எல். 2025-க்கான மெகா ஏலம் நடைபெற இருப்பதை அடுத்து, அணியில் மற்றொரு மிகப்பெரிய மாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், விராட் கோலிக்கே மீண்டும் கேப்டன்சி பொறுப்பு வழங்கப்படுவதாக தெரிகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் மூன்றுவகை போட்டிகளில் விராட் கோலி தற்போது கேப்டனாக செயல்படவில்லை. மேலும், கடந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில் தான் விராட் கோலி மீண்டும் கேப்டனாக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு முடிவதற்குள் விராட் கோலி தனது கேப்டன்சி பொறுப்பை விட்டுவிடுவதாக அறிவித்துவிட்டார். அவர் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை என்பதற்காகவே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்று அப்போது கூறப்பட்டது. அவர் கேப்டன் பதவியை விட்டு விலகிய போதிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் எந்த மாற்றமும் நடைபெறவில்லை. அந்த அணி தற்போதும் ஐ.பி.எல். கோப்பையை வெல்லாமலேயே உள்ளது.

“ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எனது கடைசி போட்டியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவே விளையாடுவேன். ஒன்பது ஆண்டுகள் பயணம்- மகிழ்ச்சி, வெறுப்பு, வருத்தம் என எல்லாம் கலந்த ஒன்றாகவே இருந்தது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கும், அளவற்ற ஆதரவை எனக்கு வழங்கிய உங்கள் அனைவருக்கும் என அடிமனதில் இருந்து நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று கடந்த 2021-இல் கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகும் போது விராட் கோலி தெரிவித்தார்.

google news