automobile
ஹாலிவுட் ஆக்ஷன் படங்கள் கூட இந்த மின்சார வாகனத்தின் முன் தோல்வியடையும்..! செம மாஸாக வரபோகும் டாடாவின் புதிய மின்சார வாகனமான அவின்யா..!
டாடா அவின்யா EV:
மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், அனைத்து ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களும் இந்த சந்தையில் நுழைய முயற்சிக்கின்றனர். இந்நிலையில், ஹாலிவுட் பாணியில் சொகுசு வாகனத்தை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. டாடா அவின்யா EV (Tata Avinya EV) என்பது இந்த ஸ்டைலான வாகனத்தின் பெயர்.
அவின்யா EV முற்றிலும் மின்சார வாகனமாக இருக்கும்,பார்வையாளர்களின் கண்களை கவரும் வகையில் இதன் அமைப்பு உள்ளது மற்றும் மிருதுவான பணத்தை வழங்கும் வசதியை கொண்டது. டாடா நிறுவனம் இதன் அறிமுக தேதி மற்றும் விலையை இன்னும் அதிகார பூர்வமாக வெளியிடவில்லை. ஊடக ஆதாரங்களின்படி, இந்த வாகனத்தை 2025 ஆம் ஆண்டில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த காரின் விலை ரூ. 30 லட்சம் எக்ஸ்ஷோரூமுக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மிமீ :
இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் தோராயமாக 200 மிமீ இருக்கும், இதனால் கடினமான இடங்களிலிருந்து திரும்பவும் வெளியேறவும் மிகவும் எளிதாக இருக்கும். அதுமட்டுமின்றி இளைஞர்களை மனதில் கொண்டு கவரும் வண்ணங்களில் இதன் வெளிப்புற தோற்றம் அமைந்திருக்கும். இந்த வாகனம் நிறுவனத்தின் Gen3 EV இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவக்க பட உள்ளது.
டாடா அவின்யா ev ரேஞ்ச் :
30 நிமிடங்களில் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.
ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 மைல்கள் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகமான சார்ஜிங் செய்யும் வசதியை கொண்டுள்ளது இதனால் இந்த காரை சுமார் 30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். அவின்யா EV ஆனது பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் அபாரமான ஸ்மார்ட்-லுக்கிங் அலாய் வீல்களை உள்ளடக்கியிருக்கும். இது ADAS மற்றும் குரல் மூலம் கட்டுபடுத்தும் பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.