Connect with us

Cricket

வாகை சூட வைக்குமா வான்கடே மைதானம்?…சுழலால் சுத்தலில் விடும் சுந்தர்!..

Published

on

Mumbai

டெஸ்ட் தொடரை நியூஸிலாந்து வென்று விட்டது, இருந்த போதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலாவது வெற்றி பெற்று தனது கிரிக்கெட் ரசிகர்ளுக்கு ஆறுதலைத் தரவேண்டும் என்ற முனைப்பில் களம் கண்டு வருகிறது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, இன்று காலை மும்பை வாங்கடேவில் துவங்கியுள்ள டெஸ்ட் போட்டியில்.

இந்தியாவில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட  சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது நியூஸிலாந்து அணி. துவக்கப் போட்டியிலேயே இந்திய ரசிகர்களின் தலையில் இடியை இறக்கியது பெங்களூருவில் இந்திய அணியை அபாரமாக வீழ்த்தியதன் மூலம்.

முதல் போட்டி தான் இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை மோசமான முடிவைத் தந்திருந்தாலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி மீண்டு எழும் என நம்பப் பட்டது. அந்த நம்பிக்கையும் வீணடிக்கப்பட்டது நியூஸிலாந்து அணியின் அபாரமான ஆட்டத்தால். இந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி விட்டது நியூஸிலாந்து.

இந்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து இன்று காலை துவங்கியிருக்கிறது.

டாஸில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது நியூஸிலாந்து. கடந்த போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்த இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வாஷிங்கடன் சுந்தர், இந்த போட்டியிலும் தனது முத்திரையை பதிக்கத் துவங்கியுள்ளார்.

35 ஓவர்கள் முடிவடைந்திருந்த நேரத்தில் 125 ரன்களை குவித்து 3 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. அந்த அணியின் வில்யங் 58 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து வருகிறார்.

Washington Sundar

Washington Sundar

இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் அகாஷ் தீப்  5 ஓவர்கள் பந்து வீசி 22 ரன்களுக்கு 1விக்கெட்டினை எடுத்திருந்தார்.

அதே நேரத்தில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 12 ஓவர்கள் பந்து வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்திருக்கிறார். இரண்டு போட்டிகளில் நியூஸிலாந்திடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்திருந்தாலும் வான்கடே மைதானத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் வாகை சூடும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *