cinema
நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள் மனதில் நிற்கும் வண்ணம் நகைச்சுவைத் திறமையால் முத்திரை பதித்திருப்பர்.
அப்படி தமிழ் சினிமாவில் காலத்தால் கூட அழிக்க முடியாத பெயருக்கு சொந்தக்காரராக இருப்பவர் நாகேஷ். கருப்பு,வெள்ளை கால காமெடியான துவங்கியது இவரது நடிப்பு, இப்போதைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை தனது தொடர் நடிப்பினால் வலம் வந்தவர் இவர்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசனுடன் இணைந்து அதிக படங்களில் நடித்திருந்த நாகேஸ் நாடக நடிகரும் கூட. ‘நாகேஸ்வரன்’ என்ற கதாப்பாத்திரத்தில் வயிற்று வலியால அவதிப்படும் நோயாளியாக நடித்திருந்தார் நாகேஷ். அந்த நாடகத்தினை தலைமை தாங்கி நடத்தி வந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
அப்போது நாகேஷின் நகைச்சுவையான நடிப்பை பார்த்து நாடக நேரம் முழுவதும் குலுங்கி, குலுங்கி சிரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
நாடகம் முடிந்தது நாகஷுக்கு கோப்பை ஒன்றினை பரிசாக வழங்கியிருக்கிறார் எம்.ஜி.ஆர். அதை வாங்கிக் கொண்ட பின்னர் நாகஷ் அடித்த டைமிங் ஜோக்கால் எம்.ஜி.ஆர்.அதிகம் கவரப்பட்டிருக்கிறார்.
அண்ணன் எல்லார் முன்னாலேயும் வைத்து கப் கொடுத்தீங்க, அப்புறமா அத பிடிங்கிவிட மாட்டீங்களே, நாடகத்துல நான் ஒன்னும் அவ்வளவு நல்லா நடிக்கலையேன்னு என தன்னடக்கத்தோடு கேள்வி கேட்டு நழுவப் பார்த்திருக்கிறார் நாகேஷ். சிரித்தபடியே நாகேஷுக்கு எம்.ஜி.ஆர். இந்த நாடகத்தில் நடித்தவர்கள் எல்லாரையும் விட நீதான்ப்பா நல்லா நடிச்சேன்னு பதிலளித்து பாராட்டியிருக்கிறார்.
‘படகோட்டி’, ‘நாளை நமதே’, ‘அன்பே வா’, தாழ்ம்பூ’, எங்க வீட்டுப் பிள்ளை, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, குடியிருந்த கோவில்’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருந்தார் நாகேஷ் எம்,ஜி.ஆருடன்.