Connect with us

automobile

Ather 450X, Ola S1, Hero Vida V1 போன்ற மின்சார வாகனங்களின் விலை தாறுமாராக உயர்ந்துள்ளது..! அதற்க்கு என்ன காரணம் தெரியுமா.?

Published

on

ev scooter

மின்சார ஸ்கூட்டர்கள் (ev) :

ஜூன் மாதம் தொடங்கிவிட்டது, இன்று முதல் இரு சக்கர வாகன மின்சார வாகனங்கள் (EV கள்) விலை அதிகமாகும். ஏனெனில் அவற்றின் மீதான அரசாங்க மானியம் ஜூன் 1, 2023 அன்றுடன் காலாவதியாகிறது. இதன் பொருள் ஏத்தர் போன்ற உயர்தர மின்சார ஸ்கூட்டர்கள் 450X, Ola S1 மற்றும் Hero Vida V1 ஆகியவை விலை அதிகமாகும்.

இந்தியாவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதை அரசாங்கத்தின் FAME திட்டம் மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களுக்கு சலுகைகளை வழங்குகிறது. இருப்பினும், FAME II திட்டத்தின் கீழ் மானியம் 1 kWhக்கு ரூ. 15,000 லிருந்து 10,000 kWh ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று கனரக தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கான அதிகபட்ச மானியம் வாகனத்தின் முன்னாள் சந்தை மதிப்பில் தற்போதைய 40% இலிருந்து 15% ஆகக் குறைக்கப்படுகிறது.

ev scooter

ev scooter

Ather 450X, Hero Vida V1, விலைகள் மாறுபடும் :

மானியக் குறைப்பின் அடிப்படையில், மற்ற பிரபலமான மின்சார ஸ்கூட்டர் விருப்பங்கள் இப்போது அனைத்து மாடல்களிலும் சுமார் ரூ. 15,000 அதிகமாக இருக்கும். ஓலாவின் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என அந்நிருவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் வரை இந்த மாடலின் விலை ரூ.1.15 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ev scooter

ev scooter

EV தயாரிப்பாளரின் பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான Ola S1 Pro இப்போது ரூ.1.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கும், இது அதன் முந்தைய விலையான ரூ.1.25 லட்சத்தை விட ரூ.15,000 அதிகமாகும். ஹீரோ விடா வி1 ப்ரோ (ரூ. 1.39 லட்சம்) விலை ரூ.4,650 அதிகமாக இருக்கும். இருப்பினும், ஹீரோ Vida V1 இன் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.1.19 லட்சமாகக் குறைத்துள்ளது, இது நுகர்வோர் தங்கள் பாக்கெட்டுகளில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க உதவும்.

google news
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

automobile

மீண்டு(ம்) வரும் ஃபோர்ட் நிறுவனம்?…விரைவில் வெளியாக உள்ள முறையான அறிவிப்பு?…

Published

on

Ford

சென்னையில் தனது நிறுவன கார் உற்பத்தியை நடத்தி வந்த ஃபோர்ட் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு முதல் இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது. தற்போது புதிய வகையான கார்கள் உற்பத்தியில் கவனம் செலுத்த தனது பனிகளை மீண்டும் சென்னையில் துவக்க ஃபோர்ட் நிறுவனம் முனைப்பு காட்டுவதாகவும், இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளாதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில் ஃபோர்ட் நிறுவனம் தனது கார் உற்பத்தியை குஜராத் சனந்த், சென்னை மறைமலைநகர் பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைத்து நடத்தி வந்தது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு தனது இந்தியாவில் தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்திக்கொண்டது அந்நிறுவனம்.

அமெரிக்க சுற்றுப் பயணத்தின் போது தமிழக முதல்வர் ஸ்டாலின் ஃபோர்ட் நிறுவனம் தங்களது பணிகளை சென்னையில் மீன்டும் துவங்க வேண்டும் என ஃபோர்ட் நிறுவன அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

ஃபோர்ட் நிறுவனம் உடனான 30ஆண்டு கால கூட்டனியை மீண்டும் புதுப்பிக்கும் வழிகள் குறித்து ஆராயப்பட்டதாக ஸ்டாலின் சொல்லியிருந்தார்.

CM Stalin

CM Stalin

இப்படிப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை சென்னையில் தனது உற்பத்தியை மீண்டும் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் கவனம் செலுத்தும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் மீண்டும் ஆலையை அமைக்க மாநில அரசிடம் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக ஃபோர்ட் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், மின்சார வாகன விற்பனையுடன் இந்தியாவில் நுழைவதற்கான முயற்சிகளை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இதனால் முன்போல சென்னை ஃபோர்ட் உற்பத்தி ஆலையில் பணியாற்ற வாய்ப்புகள் உண்டாகும் நிலை உருவாகியுள்ளது.

google news
Continue Reading

automobile

வண்டி வேணும்ன்னா மூனு மாசம் வெயிட் பண்ணுங்க!…பின்ன வோல்டு நம்பர் ஒன்னுன்னா சும்மாவா?…

Published

on

Bike

உலகம் முழுவதும் உள்ள வாகனங்கள் பொதுவாக பெட்ரோல், டீசலாலே நிரப்பப்பட்டு இயக்கப்படுகிறது. அதன் பின்னர் கேஸ்கள் மூலம் இவை இயக்கப்பட்டது. இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோலே எரி பொருளாக நிரப்பபட்டு அதன் மூலமே இயக்கப்படுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கான தேவைகள் அதிகரிக்கத் துவங்கியது. இதிலிருந்து எடுக்கப்படும் எரிபொருட்களே மனிதர்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வரத்துவங்கியதால், சார்ஜ் செய்து பேட்டரிகள் மூலம் இயங்கக்கூடிய வாகனங்கள் சந்தையில் அறிமுகமானது. இவற்றிற்கு அதிக வரவேற்பு உலக அளவில் கிடைத்து. இப்போது பஸ், கார், உள்பட சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கூட பேட்டரிகள் மூலமாக இயக்கப்பட்டு வருகிறது.

இந்த வாகனப் போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது இந்தியாவின் டூவிலர் தயாரிப்பு முன்னணி நிறுவனமான பஜாஜ்.

Bajaj Freedom

Bajaj Freedom

சிஎன்ஜி (CNG) கேஸின் மூலம் இயக்கப்படக் கூடிய முதல் டூவீலர்களை உலகிற்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியாவின் பஜாஜ் நிறுவனம். ஃபிரீடம் என்ற பெயரில் 125 சிசி (CC)இஞ்சின், என்ஜிஓ 4 டிரம் (NGO 4 Drum), என்ஜிஓ 4 டிரம் எல்ஈடி(NGO 4 Drum LED), என்ஜிஓ டிஸ்க் எல்ஈடி டிஸ்க் எல்ஈடி (NGO 4 Disc LED) என்ற மூன்று மாடல்களில் விற்பனையாகி வருகிறது பஜாஜின் ஃபிரீடம்.

மும்பை, புனே, குஜராத் உள்ளிட்ட சில நகரங்களில் மட்டுமே கிடைத்து வரும் இந்த பைக்குகளை சொந்தமாக்க மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

google news
Continue Reading

automobile

என்ன லைசன்ஸ் இல்லாமலே பைக் ஓட்டலாமா?..இது என்ன புதுசா இருக்கே…

Published

on

atom gp1 bike

இந்தியாவில் நடக்க சாத்தியமே இல்லை என்று நினைத்த MotoGP, இந்த ஆண்டு MotoGP பாரத்  என்ற பெயரில் இந்தியாவில் நடைபெறவிருப்பது இந்திய வாகன பிரியர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை தந்துள்ளது. MotoGP பாரத் தொடர் உத்திரபிரதேசத்தின், நொய்டாவில் உள்ள Buddh International Circuit- ஆல் நடத்தப்படுகிறது.

atom gp1 bike launched

atom gp1 bike

MotoGP பாரத் பற்றிய விளம்பரங்கள் நாடு முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான வரவேற்புகளும் அதிகரித்தவண்ணமாக உள்ளது. இந்தியாவிலும் Racing culture பல முன்னேற்றம் கண்டுள்ளது. பலதரபட்ட மக்களிடையில் மோட்டார் ரேசிங்கின் ஆர்வம்  அதிகரித்தும் காணப்படுகிறது.

மக்களின் ஆர்வத்தை புரிந்துகொண்டு அதை திறம்பட செயல்படுத்த மற்றும் தரமான வீரர்களை உருவாக்குவதையும் கருத்தில் கொண்டு, நமது கோயம்புத்தூரை சேர்ந்த CRA Motorsports, Atom GP1  race bike- ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

Atom GP1 பைக்கானது 10 முதல் 17 வயதான ரேசிங்கில் ஆர்வமுள்ளவர்களுக்கானது. இந்த பைக்கானது பைக் வகைகளில் ‘mini GP motorcycle kit’ என்கிற புது வகையை உருவாக்கியுள்ளது. Atom GP1 பைக்கில்  5-ஸ்பீடு, 159.3சிசி சிங்கில் சிலிண்டர் பொறுத்தப்பட்டுள்ளது, 2-வால்வு கார்புரேட்டட் இஞ்ஜின் ஆகும். இது 15bhp power,13.85Nm torque வெளிப்படுத்தும் திறன்கொண்டது. இந்த பைக்கில் USD front fork முன் பகுதியிலும், பின்பகுதிக்கு Mono shock absorber-ம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

atom GP1

atom GP1

12அங்குல அலாய் வீல்களை கொண்ட இந்த பைக்கில் TVS Remora tyre பொருத்தப்பட்டுள்ளது. முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் இடம்பெற்றுள்ளது.என்னடா சின்ன பிள்ளைங்க லைசன்ஸ் இல்லாம பைக் ஓட்டமுடியுமானு நினைக்காதீங்க.

இந்த பைக் ரோட்டில் ஓட்டுவதற்கு அல்ல. இது பயிற்சி மற்றும் ரேசிங்கிற்காக பயிற்சி தளங்களில் மட்டுமே உபயோகப்படுத்த முடியும். சிறுவயதிலிருந்தே moto racing பயிற்சி அளிப்பதால் எதிர்காலத்தில் தரமான வீரர்களை MotoGP-யிலும் பார்க்க முடியும். ஆனால் இந்த பைக்கின் விலை ரூ.2.75லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

google news
Continue Reading

automobile

ZS எலெக்ட்ரிக் காரில் இப்படியொரு வசதியா? எம்ஜி-க்கு தாராள மனசு தான்!

Published

on

By

MG-ZS-EV-Featured-Img

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ZS EV எஸ்.யு.வி.-இன் புதிய எக்ஸ்-க்ளுசிவ் ப்ரோ வெர்ஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வெர்ஷனில் ADAS (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) ஃபுல் சூட் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. புதிய எம்ஜி ZS EV மாடலின் விலை ரூ. 27 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய எக்ஸ்-க்ளூசிவ் ப்ரோ வெர்ஷனின் விலை ஸ்டான்டர்டு எக்ஸ்-க்ளுசிவ் வெர்ஷனை விட ரூ. 59 ஆயிரம் வரை விலை அதிகம் ஆகும். அதிக விலைக்கு ஏற்ப புதிய வெர்ஷனில் பல்வேறு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய வெர்ஷனில், பெட்ரோல் என்ஜின் கொண்ட ஆஸ்டர் எஸ்.யு.வி.-க்கு இணையான அம்சங்கள் உள்ளன.

MG-ZS-EV-3

MG-ZS-EV-3

என்னென்ன மாற்றங்கள் :

இதுவரை எம்ஜி ZS EV மாடலில் பிலைன்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன், லேன் சேன்ஜ் அசிஸ்ட், ரியர் கிராஸ்-டிராஃபிக் அலர்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது புதிய வெர்ஷனில் டிராஃபிக் ஜாம் அசிஸ்ட், ஃபார்வேர்டு கொலிஷன் வார்னிங், ஆட்டோனோமஸ் எமர்ஜன்சி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபாச்சர் வார்னிங், ஸ்பீடு அசிஸ்ட் சிஸ்டம்கள், அடாப்டிவ் குரூயிஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் அசிஸ்டிவ் சிஸ்டம்களின் சென்சிடிவிட்டியை மேனுவல் முறையில் செட் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருப்பது தான். அதன்படி சென்சிடிவிட்டியை லோ, மீடியம் மற்றும் ஹை என மூன்று நிலைகளில் அட்ஜஸ்ட் செய்ய முடியும். இந்த சிஸ்டம் ஹேப்டிக், ஆடியோ மற்றும் விஷூவல் என மூன்று லெவல்களில் எச்சரிக்கை செய்யும்.

MG-ZS-EV-4

MG-ZS-EV-4

பாதுகாப்பு அம்சங்கள் :

இவைதவிர எம்ஜி ZS EV மாடலின் இதர அம்சங்களில் வெறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடலில் மற்ற பாதுகாப்பு உபகரணங்களான ஆறு ஏர்பேக், இ.பி.டி. கொண்ட ஏ.பி.எஸ்., எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா, ஹில் டிசென்ட் கன்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் பானரோமிக் சன்ரூஃப், 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜிங், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது.

MG-ZS-EV-5

MG-ZS-EV-5

மெக்கானிக்கல் மாற்றங்கள் இல்லை :

எம்ஜி ZS EV மாடலில் 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 461 கிலோமீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். அன்றாட பயன்பாடுகளின் போது, போக்குவரத்து நெரிசல் மற்றும் இதர விஷயங்கள் காரணமாக ரேன்ஜ்-இல் மாற்றங்கள் ஏற்படலாம்.

புதிய ZS EV வெர்ஷனிலும் முன்புற ஆக்சிலில் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது 176 ஹெச்.பி. பவர் மற்றும் 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 8.5 நொடிகளில் எட்டிவிடும்.

இதன் விலை ரூ. 23 லட்சத்து 38 ஆயிரம் என்று துவங்கி அதிகபட்சம் ரூ. 27 லட்சத்து 90 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் எம்ஜி ZS EV மாடல் பி.ஒய்.டி. அட்டோ 3 மற்றும் ஹூண்டாய் கோனா EV போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

google news
Continue Reading

automobile

28 கிமீ மைலேஜ்.. டாப் டக்கர் லுக்.. Fronx CNG வாங்க வேறென்ன வேண்டும்?

Published

on

By

Maruti-Suzuki-Fronx-1

மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது Fronx காரின் CNG வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாருதி Fronx CNG வேரியண்ட் விலை ரூ. 8 லட்சத்து 41 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது மாருதி சுசுகி Fronx மாடலின் பெட்ரோல் வெர்ஷன்களை விட ரூ. 95 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.

புதிய CNG வெர்ஷன் சிக்மா மற்றும் டெல்டா என்று இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மாருதி சுசுகி Fronx CNG வெர்ஷனை பயனர்கள் சந்தா முறையிலும் வாங்கிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இதற்கு மாதம் ரூ. 23 ஆயிரத்து 248 செலுத்த வேண்டும்.

Maruti-Suzuki-Fronx-2

Maruti-Suzuki-Fronx-2

மாருதியின் CNG மாடல்கள் :

புதிய வெர்ஷனை சேர்க்கும் பட்சத்தில் மாருதி சுசுகி நிறுவனம் மொத்தத்தில் 15 CNG மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில் ஆல்டோ, ஆல்டோ K10, பிரெஸ்ஸா, செலரியோ, டிசையர், எர்டிகா, ஈகோ, ஸ்விஃப்ட், எஸ் பிரெஸ்ஸோ, வேகன் ஆர் உள்ளிட்டவை மாருதி சுசுகி அரினா பிரிவில் கிடைக்கும் CNG மாடல்கள் ஆகும்.

Maruti-Suzuki-Fronx-CNG

Maruti-Suzuki-Fronx-CNG

நெக்சா பிரான்டிங்கில் புதிய Fronx தவிர கிரான்ட் விட்டாரா, XL6, பலேனோ போன்ற மாடல்களில் CNG கிட் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

என்ஜின் மற்றும் மைலேஜ் விவரங்கள் :

மாருதி சுசுகி Fronx CNG வெர்ஷனில் 1.2 லிட்டர் K-சீரிஸ், டூயல் ஜெட், டூயல் VVT பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 76 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 98.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய CNG கிட் மூலம், இந்த கார் லிட்டருக்கு 28.51 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என்று மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது.

Maruti-Suzuki-Fronx-4

Maruti-Suzuki-Fronx-4

இதர அம்சங்கள் :

புதிய மாருதி சுசுகி Fronx CNG வெர்ஷன்களில் டூயல் ஏர்பேக், இ.பி.டி.-யுடன் ஏ.பி.எஸ்., ரியர் பார்க்கிங் சென்சார்கள், 7 இன்ச் ஸ்மார்ட்பிளே ப்ரோ டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல்கள், கீலெஸ் என்ட்ரி, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஃபாௌக்ஸ் ஸ்கிட் பிலேட்கள் மற்றும் ஷார்க் ஃபின் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

Maruti-Suzuki-Fronx-3

Maruti-Suzuki-Fronx-3

விலை விவரங்கள் :

மாருதி சுசுகி Fronx CNG சிக்மா MT ரூ. 8 லட்சத்து 41 ஆயிரம்
மாருதி சுசுகி Fronx CNG டெல்டா MT ரூ. 9 லட்சத்து 27 ஆயிரம்

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

google news
Continue Reading

Trending