Vijay: நாங்கள் தற்குறி அல்ல; ஆச்சரியக்குறி; மாற்றத்துக்கான அறிகுறி” – அனல் பறந்த விஜய் பேச்சு

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் விஜய். இவர் தற்போது தமிழ்நாடு வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கி முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். தமிழகம் முழுவதும் அர்சையல் பரப்புரை மேற்கொண்டு வந்தார். ஆனால் கடந்த மாதம் கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு பின் சுற்றுப்பயணத்தை அவர் நிறுத்தி வைத்திருந்தார். பொது வெளியில் வருவ்தையும் தவிர்த்து வந்தார். வீடியோ மற்றும் அறிக்கைகள் வாயிலாக அரசியல் பயணத்தை தொடர்ந்து வந்தார்.

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின் விஜய் காஞ்சிபுரத்தில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு வந்தார். ஜேப்பியார் கல்லூரியில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படிருந்தன. அந்த நிகழ்ச்சியில் விஜய் பேசும்போது, மர்மயோகி திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். பேசிய, குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன் என்ற வசனத்தை விஜய் மேடையில் மேற்கோள் காட்டி இந்த வசனத்தை நான் ஏன் பேசுகிறேன் என்பதை தேவைப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று கூறினார்.

மேலும் சோசியல் மீடியாக்களில் தவெகவிரை தற்குறிகள் என்று ட்ரோல் செய்துவந்தனர். இத்னையும் அவ்ர் கடுமையாக சாடினார். வாக்கு செலுத்திய மக்களையே தற்குறிகள் என்று அழைப்பதா? இதுதான் நீங்கள் மக்களுக்குக் காட்டும் நன்றியா? நாங்கள் தற்குறி அல்ல; ஆச்சரியக்குறி; மாற்றத்துக்கான அறிகுறி என்று பேசினார்.

Leave a Comment