Connect with us

job news

பட்டம் பெற்றவர்களா நீங்கள்..? உங்களுக்காக காத்திருக்கிறது பொறியாளர் வேலை..! உடனே விண்ணப்பிங்க..

Published

on

BHEL Recruitment 2023

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) இந்தியாவின் முதன்மையான பொறியியல் அமைப்பு, இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளான மின் உற்பத்தி மற்றும் பரிமாற்றம், தொழில், போக்குவரத்து, எண்ணெய் மற்றும் எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாதுகாப்பு போன்ற உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.

BHEL Recruitment 2023

BHEL Recruitment 2023

பிஹெச்இஎல், மின் துறை – தென் மண்டலம், யதாத்ரி டிபிஎஸ் திட்டத்திற்கு, சிவில் துறையில் அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் முழுவதுமாக படிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்:

பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட், சிவில் துறையில் அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் பணிக்கு 10 காலியிடங்கள் உள்ளன.

BHEL Recruitment 2023

BHEL Recruitment 2023

விண்ணப்பதாரர் வயது:

மேலே குறிப்பிடப்பட்ட வேலை பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 34 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு ஆணையம் வெளியிட்டுள்ள Notification  அறிவிப்பை அணுகலாம்.

BHEL Recruitment 2023

BHEL Recruitment 2023

விண்ணப்பதாரர் தகுதி:

பொறியாளர்கள் பணிக்கு விண்ணப்பிப்பவர் சிவில் இன்ஜினியரிங்/தொழில்நுட்பத்தில் முழுநேர இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் அல்லது டெக்னாலஜியில் 5 ஆண்டுகள் இணைந்த முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்பார்வையாளர்கள் பணிக்கு விண்ணப்பிப்பவர் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் முழுநேர டிப்ளமோவில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிப்பவர் மின் உற்பத்தி நிலையங்கள், எஃகு ஆலைகள், சிமென்ட் ஆலை, சுத்திகரிப்பு ஆலைகள், பெட்ரோ-கெமிக்கல்ஸ் போன்ற துறையில் குறைந்தபட்சம் 2 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • மேலே உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://careers.bhel.in/bhel/jsp/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவேண்டும்.
  • அங்கு இருக்கும் விண்ணப்படிவத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும். அடையாளச் சான்று, கல்வித் தகுதி, சமீபத்திய புகைப்படம், ரெஸ்யூம் போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யவும்.
  • அனைத்து தகவல்களையும் பதிவு செய்த பிறகு, விவரங்கள் சரியாகாக உள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்க்கவும்.
  • பின் உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பக்கட்டணம்:

பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்தவேண்டும். விண்ணப்பக்கட்டணம் திருப்பி தரப்பட மாட்டாது.

சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:

பொறியாளர் பதவிக்கு நியமிக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.46,130 மற்றும் மேற்பார்வையாளர்கள் பதவிக்கு விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.82,620 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 8 ஆகும். மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

BHEL Recruitment 2023

BHEL Recruitment 2023

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *