மலேசியாவிற்கு ஒரு நாள் முன்பே செல்லும் விஜய்… கரூரில் மக்களைச் சாகவிட்டது ஏன்?.. சாட்டை துரைமுருகன் அட்டாக்

நடிகர் விஜய்யின் மலேசியா பயணம் மற்றும் கரூரில் நடைபெற்ற கட்சியின் பரப்புரையின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து, நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான ‘சாட்டை’ துரைமுருகன் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

கரூரில் ஏற்பட்ட துயர சம்பவத்தையும், மலேசியாவில் நடந்த ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழாவையும் ஒப்பிட்டு அவர் எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தாமதமாக வந்த விஜய்..தவித்த மக்கள்!
தவெக தலைவர் விஜய்யின் பொறுப்பற்ற தன்மையே கரூர் மரணங்களுக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் கூறுகையில்,

“மலேசியாவில் நடக்கும் தனது பட விழாவிற்கு ஒரு நாள் முன்பே சென்று தயாராகும் விஜய், தமிழக மக்களுக்காகச் செய்த பரப்புரைக்கு மட்டும் ஏன் தாமதமாக வந்தார்? கரூரில் மதியம் 12 மணிக்கே விஜய் பேசுவார் என்று புஸ்ஸி ஆனந்த் அறிவித்தார். அவரை நம்பி வந்த ஆயிரக்கணக்கான மக்கள், சுட்டெரிக்கும் வெயிலில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி காத்துக் கிடந்தனர். ஆனால், சொன்ன நேரத்திற்கு வராமல் விஜய் காலம் தாழ்த்தியது தான் மிகப்பெரிய துயரத்திற்கு வித்திட்டது.”

வயிற்றில் மலம், சிறுநீரோடு இறந்த பெண்கள் !
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் நிலை குறித்து அவர் வெளியிட்ட தகவல் காண்போரை அதிரச் செய்துள்ளது. “கரூரில் உயிரிழந்த 41 பேரில் 11 பெண்களின் உடலை உடற்கூறாய்வு செய்த போது, அவர்கள் வயிற்றில் முழுக்க முழுக்க மலம் மற்றும் சிறுநீர் தேங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கூட வழியில்லாமல், கழிவறை வசதி இல்லாத அந்த மைதானத்தில் பல மணி நேரம் அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு தவித்துள்ளனர். இதன் விளைவாகவே அவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்” என்று சாட்டை துரைமுருகன் பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பினார்.

மக்களுக்கான தலைவரா? சினிமா நட்சத்திரமா?
“தன்னை நம்பி வந்த மக்கள் இப்படிப் பரிதாபமாகச் செத்து மடிந்த போதும், அவர்களைப் போய்ப் பார்க்காத விஜய் எப்படி மக்களுக்கான தலைவராக முடியும்? ஒரு பட விழாவிற்குத் தரும் முக்கியத்துவத்தைத் தன் தொண்டர்களின் உயிருக்கு அவர் ஏன் தரவில்லை? இப்படிப்பட்ட ஒருவரை மக்கள் எப்படித் தலைவராக ஏற்பார்கள்?” என்று அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

சமீபத்தில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக திமுக கட்சி விஜய்யை விமர்சித்து வரும் நிலையில், சாட்டை துரைமுருகனின் இந்தச் ‘சாட்டையடி’ விமர்சனம் தவெக தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment