விஜய்யே கம்முனுதான் இருக்காரு.. செல்வப்பெருந்தகைக்கு ஏன் இவ்வளவு துள்ளல்?.. தமிழிசை செம நோஸ் கட்!

நடிகர் விஜய் மீதான சிபிஐ விசாரணை தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறிய கருத்துக்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது பாணியில் செம ‘நோஸ் கட்’ கொடுத்துள்ளார்.

விஜய்யை மிரட்டுகிறதா பாஜக?
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை வளையத்திற்குள் விஜய் வந்துள்ள நிலையில், இது குறித்துப் பேசிய செல்வப்பெருந்தகை, “விஜய் சிங்கத்தின் வாயில் சிக்கியுள்ளார். அவரை மிரட்டி பாஜக கூட்டணிக்கு இழுக்கவே சிபிஐ ஏவி விடப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழிசை பதிலடி:
இந்த விவகாரம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், செல்வப்பெருந்தகையின் கருத்தை அடியோடு மறுத்தார். அவர் கூறியதாவது,

“விஜய் மேல நடக்குற சிபிஐ விசாரணைக்கு நாங்கதான் (பாஜக) காரணம்னு விஜய்யும் சொல்லல, அவரோட தவெக ரசிகர்களும் சொல்லல. ஆனா, இந்த செல்வப்பெருந்தகை மட்டும் நடுவுல புகுந்து எதுக்கு இப்படி எகிறுறாருன்னு தெரியல? இந்த மேட்டரை வச்சு அவரு குளிர்காயப் பார்க்குறாரு.”

குளிர்காய நினைக்காதீங்க:
மேலும் பேசிய அவர், “விசாரணை அமைப்புகள் அவங்களோட வேலையைச் செய்யுது. அதுல எதுக்கு நீங்க தேவையில்லாம மூக்கை நுழைக்கிறீங்க? விஜய் ரசிகர்களே அமைதியா இருக்கும்போது, செல்வப்பெருந்தகை மட்டும் ஏன் இவ்வளவு சீன் போடுறாரு? இது முழுக்க முழுக்க அரசியல் லாபம் தேடுற வேலை. மத்தவங்க விவகாரத்துல புகுந்து அரசியல் பண்ண நினைக்காதீங்க” என்று காட்டமாகத் தெரிவித்தார்.

பரபரக்கும் 2026 அரசியல்!
விஜயை மையப்படுத்தி பாஜகவும் காங்கிரஸும் மோதிக்கொள்வது 2026 தேர்தலுக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. செல்வப்பெருந்தகையின் “சிங்கத்தின் வாய்” கமெண்ட்டுக்கு தமிழிசை கொடுத்துள்ள இந்த “கூல்” பதிலடி இப்போ சோஷியல் மீடியால செம வைரல்!

Leave a Comment