நோ சான்ஸ்.. கதவு மூடியாச்சு!.. ஓபிஎஸ்-க்கு எடப்பாடி பழனிசாமி வைத்த ‘பெரிய’ முற்றுப்புள்ளி!

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைவார் என்று அவ்வப்போது கிளம்பும் வதந்திகளுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது மிகத்தெளிவாகவும், ஆவேசமாகவும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பொதுக்குழுவே உச்சபட்ச அதிகாரம்!
செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், ஓ.பி.எஸ் தரப்பில் இருந்து வரும் இணைப்பு குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தைச் சேர்க்க எந்த வாய்ப்பும் இல்லை. இது என் தனிப்பட்ட முடிவல்ல, அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு. கட்சியின் சட்டத்திட்டங்களின்படி, பொதுக்குழுவில் ஒருமுறை முடிவெடுத்து நீக்கப்பட்ட ஒருவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது என்ற பேச்சிற்கே இடமில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நிரந்தரமாக மூடப்பட்ட கதவுகள்?
ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகப் பலமுறை முயற்சி செய்தும், எடப்பாடி பழனிசாமி தனது முடிவில் உறுதியாக இருந்து வருகிறார்.

துரோகம்:
கட்சிக்குத் துரோகம் செய்தவர்களை எக்காலத்திலும் மன்னிக்க முடியாது என்பதில் இ.பி.எஸ் பிடிவாதமாக உள்ளார். தற்போது அதிமுகவில் எடப்பாடியின் கை ஓங்கியுள்ள நிலையில், மீண்டும் இரட்டைத் தலைமையையோ அல்லது ஓ.பி.எஸ் வருகையையோ ரத்தத்தின் ரத்தங்கள் விரும்பவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி!
சமீபகாலமாக பாஜக மற்றும் பிற கட்சிகள் அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், எடப்பாடியின் இந்த நேரடியான “நோ” சொல்லும் பாணி, ஓபிஎஸ் முகாமுக்கு ஒரு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

“முடிந்த கதை.. இனி ஒட்டாது!” என்கிற ரீதியில் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எடப்பாடி தனது முழுமையான கட்டுப்பாட்டில் சந்திக்கத் தயாராகிவிட்டதையே காட்டுகிறது.

Leave a Comment