automobile
டாடா ஹாரியரின் புதிய சிறப்பம்சங்கள்..! க்ரெட்டா செல்டோஸுக்கு கடுமையான போட்டியை அளிக்குமா..?
டாடா ஹாரியர் 2023 :
டாடா மோட்டார்ஸ் தனது கார் பிரிவுகளில் அற்புதமான கார்களைக் கொண்டுள்ளது. இதில் டாடா ஹாரியர் நிறுவனத்தின் மிகப்பெரிய SUV பிரிவின் கார் ஆகும். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ரெட் டார்க்’ பதிப்பிற்குப் பிறகு இதன் விற்பனை சந்தையில் சூடு பிடித்துள்ளது.
போட்டியாளர்கள் வரிசை :
இந்த கார் சந்தையில் மஹிந்திரா XUV700, MG ஹெக்டர் மற்றும் ஜீப் காம்பஸ் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. டாடா நிறுவனம் ஹாரியர் ரக கார்களை இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது அதன் டாப்-ஸ்பெக் வகைகளில் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸுடன் போட்டியிடுகிறது.
டாடா ஹாரியர் மைலேஜ் :
டாடா ஹாரியர் 1956 cc இன் சக்திவாய்ந்த எஞ்சினைப் பெறுகிறது. கார் 167.67 பிஎச்பி திட ஆற்றலைப் வெளிப்படுத்தும். டாடாவின் ஐந்து இருக்கைகள் கொண்ட கார் வரிசையில் வருகிறது. அதன் வெவ்வேறு வகைகளில் 14.6 முதல் 16.35 kmpl வரையிலான மைலேஜ் தருகிறது. இது டீசல் வேரியண்டில் வருகிறது.
மாடலின் வகைகள் :
டாடா ஹாரியர் இது ஒரு நடுத்தர SUV காராகும். இது சந்தையில் ரூ.15 லட்சம் எக்ஸ்ஷோரூம் முதல் ரூ.24.07 லட்சம் எக்ஸ்ஷோரூம் வரை கிடைக்கிறது. நிறுவனம் XE, XM, XMS, XT+, XZ மற்றும் XZ+ என ஆறு வகைகளைக் கொண்டுள்ளது. மேலும் ‘டார்க்’ மற்றும் புதிய ‘ரெட் டார்க்’ போன்ற சிறப்பு பதிப்புகள் உள்ளன. இவைகள் அதன் டாப் வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.
இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் :
டாடாவின் இந்த சக்திவாய்ந்த கார் 2 லிட்டர் டீசல் எஞ்சினில் 170 PS ஆற்றலையும் 350 Nm உச்ச டார்க்கையும் வழங்குகிறது. இது அதிக செயல்திறன் கொண்ட காராக அமைகிறது. இந்த கார் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. டாடா ஹாரியரில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் கூடிய 10.25-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைப் பெறுகிறது.
டாடா ஹாரியர் EV 2024 ?:
இந்த பிரமிக்க வைக்கும் காரில் 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 6-வே பவர்-அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட், மெமரி மற்றும் வெல்கம் ஃபங்ஷன், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜிங். இந்த காரில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், 360 டிகிரி கேமரா, ஹில்-ஹோல்ட் மற்றும் ஹில்-டிசென்ட் கண்ட்ரோல் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. தற்போது மின்சார வகனங்களின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. டாடாவின் டியாகோ ஈவி மற்றும் நெக்ஸான் ஈவி போன்ற வகனங்கள் நடைமுறையில் இருக்கும் நிலையில் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் டாடா ஹாரியர் EV ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.