latest news
போட்டி போட்டு அள்ளி கொடுக்கும் ஏர்டெல் மற்றும் ஜியோ..யாரு கம்மி விலையில அதிக டேட்டா தராங்கனு பார்ப்போமா?..
உபயோகிப்பளர்களுக்கு பலன்களை அள்ளி தருவதில் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் போட்டி போட்டு கொள்கின்றன. அனைவரும் ஏதாவது சலுகை மூலமாவது மக்களை தங்களின் நெட்வொர்கிற்கு வர வைக்க வேண்டும் என்பதற்காக பல வித்தியாசமான ஆஃபரை மக்களுக்கு கொடுக்கின்றன. அந்த வரிசையில் தற்போது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் அதிக டேட்டாவை மக்களுக்கு அளிக்கின்றன. இந்த பிளான் அனைத்தும் ஒரு நாளைக்கு அதிக அளவு டேட்டாவை உபயோகப்படுத்துபவர்களுக்கு ஏற்புடையதாக அமைந்துள்ளது. அதனை பற்றி இப்போது பார்க்கலாம்.
ஏர்டெலின் ரூ. 49க்கான பிரிபெய்டு திட்டம்:
இந்த பிளான் மூலம் நாம் ரூ. 49 க்கு ரீசார்ஜ் செய்தால் நமக்கு 6 ஜிபி டேட்டா கிடைகின்றது. ஆனால் இந்த திட்டத்தின் காலம் ஒரு நாள் மட்டுமே ஆகும். எனவே அதிக அளவு டேட்டா தேவைபடுபவர்களுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும். ஏர்டெலானது தற்போது 3000க்கும் அதிகமான நகரங்களில் தங்களது 4ஜி மற்றும் 5ஜி சேவையை அளிக்கின்றன.
ஜியோவின் ரூ. 61க்கான திட்டம்:
இத்திட்டத்தின் கீழ் நாம் ரூ. 61க்கு ரீசார்ஜ் செய்தால் நமக்கு 6ஜிபி 5ஜி டேட்டா கிடைகின்றது. ஆரம்பத்தில் இந்த திட்டத்தில் கீழ் 10ஜிபி வரை டேட்டா கொடுக்கப்பட்டது. பின் அது 6ஜிபியாக குறைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் காலமும் ஒரு நாள் மட்டுமே. இந்த திட்டத்தின் கீழ் நாம் 5ஜி சேவையை அனுபவிக்கலாம்.
இரண்டு திட்டங்களும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையதாகவே உள்ளது. எனவே பயனாளர்களுக்கு எந்த நெட்வொர்க் தேவையோ அதன் முலம் ரீசார்ஜ் செய்து பயனடையலாம்.