Connect with us

automobile

ரத்தன் டாடா பயன்படுத்தும் சிம்பில் கார்களின் பட்டியல்..இதோ.!

Published

on

tata cars

டாடா குழுமங்கள் தலைவர் ரத்தன் டாடா தனது எளிய வாழ்க்கை முறை, வியாபார துறையில் பெரும் தலைவராக விளங்கி வருகிறார். 81-வயதான ரத்தன் டாடா பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி, அவற்றை வெற்றிகரமாக நடத்திக்காட்டும் வெற்றிகரமான தொழிலதிபர் ஆவார். ரத்தன் டாடாவின் குறிப்பிடத்தக்க திட்டங்களில் ஒன்றாக டாடா நானோ எப்போதும் இருக்கும்.

மிகக் குறைந்த விலையில் கார் அறிமுகம் செய்யும் நோக்கில் இந்த மாடல் உருவாக்கப்பட்டது. வியாபார துறையில் புகழ்பெற்று விளங்கும் ரத்தன் டாடாவுக்கு ஆட்டோமொபைல் துறை மீது தனி ஆர்வம் ஆரம்பம் முதலே இருந்து வந்தது. ரத்தன் டாடா கராஜில் உள்ள கார்களுடன் ரத்தன் டாடா இருப்பது போன்ற புகைப்படம் பலமுறை இணையத்தில் வெளியாகி உள்ளன.

விலை உயர்ந்த, ஆடம்பர கார்களுக்கு சொந்தக்காரர் ஆன ரத்தன் டாடா சற்றே விலை குறைந்த கார்களையும் பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில், ரத்தன் டாடா பயன்படுத்தி வரும் சிம்பில் கார் மாடல்கள் என்னென்ன என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

டாடா நெக்சான் :

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் காம்பேக்ட் எஸ்.யு.வி. டாடா நெக்சான் ஆகும். அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே இந்த மாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு குளோபல் NCAP கிராஷ் டெஸ்டில் 5-ஸ்டார் பெற்ற முதல் கார் இது ஆகும்.

tata nexon

tata nexon

ரத்தன் டாடாவும் தனக்கென டாடா நெக்சான் எஸ்.யு.வி. மாடலை வைத்திருக்கிறார். இவர் இந்த எஸ்.யு.வி.-யின் பிரீ பேஸ்லிஃப்ட் வெர்ஷனை பயன்படுத்தி வருகிறார். வைப்ரன்ட் புளூ நிறம் கொண்ட நெக்சான் மாடலின் 1.5 லிட்டர் டர்போ டீசல் வேரியண்டை ரத்தன் டாடா வைத்திருக்கிறார். இந்த என்ஜின் 108 ஹெச்பி பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

ஹோண்டா சிவிக் :

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் ஸ்டைலான பிரீமியம் செடான் மாடலாக ஹோண்டா சிவிக்-ஐ அறிமுகம் செய்தது. இதன் மெல்லிய டிசைன், பிரீமியம் அம்சங்கள் மற்றும் அதிக இடவசதி கொண்ட கேபின் போன்ற அம்சங்களால் ஹோண்டா சிவிக் மாடலை பல்வேறு பிரபலங்கள் பயன்படுத்தினர்.

tata cars

tata cars

ரத்தன் டாடா பயன்படுத்தி வரும் ஹோணஅடா சிவிக் மாடல் வெற்றை நிறம் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 1.8 லிட்டர் V-TEC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 130 ஹெச்பி பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

டாடா நானோ EV :

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நானோ EV மாடலை அறிமுகம் செய்யவில்லை. இந்த நிலையில், எலெக்ட்ரா EV எனும் நிறுவனம் பிரத்யேகமாக உருவாக்கிய டாடா நானோ EV மாடலை ரத்தன் டாடாவுக்கு பரிசாக வழங்கி இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் டாடா நானோ மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் பற்றி ரத்தன் டாடா கூறும் கருத்துக்களை அறிந்து கொள்ளும் நோக்கில், இந்த கார் பரிசாக வழங்கப்பட்டது.

tata nano

tata nano

தோற்றத்தில் இந்த கார் டாடா நானோ ஹேச்பேக் போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலில் 72 வோல்ட் ஆர்கிடெக்ச்சர் பயன்படுத்தப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 160 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்றும் மணிக்கு 60 கிலோமீட்டர்கள் வேகத்தை பத்து நொடிகளுக்குள் எட்டிவிடும் என்று தெரிகிறது.

Photo Courtesy: Cartoq

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *